பாணசுரனுக்கு வரமளித்த சிவன்: பாணலிங்கம் சிறப்பு!

185

பாணசுரனுக்கு வரமளித்த சிவன்: பாணலிங்கம் சிறப்பு!

லிங்க வடிவில், வழவழப்பு தன்மையுடன் இருக்கும் ஒரு வகையான கல் தான் பாணலிங்கம். ஒரு பாணலிங்கமானது 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது என்று கூறப்படுகிறது.

முனிவர் ஒருவர், தனது சீடர்களுக்கு சிவபெருமான் வழிபாட்டின் மகிமை, சிவபூஜை ஆகியவற்றைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பாணாசுரன் என்ற அசுரன் அதனை கேட்டான். இதையடுத்து, அவனுக்கும் சிவபூஜை செய்து, பலன்களை அடைய வேண்டும் என்று ஆசை தோன்றியது.

இதனால், சிவபெருமானை நினைத்து கடுமையான தவம் புரிந்தான். பாணாசுரனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே, ஆயிரம் தலைகள் கொண்டும், 2000 கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபடவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளான். மேலும், அந்த வழிபாட்டை மேற்கொள்வதற்காக எனக்கு பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும் என்று கேட்டான்.

இதைத் தொடர்ந்து, சிவபெருமானும், பாணாசுரனுக்கு வேண்டிய வரம் அளித்தார். தான் வேண்டிய வரம் பெற்ற பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் பாணலிங்கம் என்று அழைக்கப்படுகின்றன. பாணலிங்கம் என்பதற்கு பாணம் என்ற நீரில் தாமாக உற்பத்தியாகும் என்ற கருத்தும் இருக்கிறது.

லிங்க வடிவத்தில் வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகை கல் தான் பாணலிங்கம். இந்த லிங்கத்தின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும்.

இதுதவிர ஆயிரம் சிவலிங்கங்களுக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம். அதே போன்று, ஒரு பாணலிங்கமானது 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது என்றும் கூறப்படுகிறது.