பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்?

100

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்?

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு கனவுகள் தான் சிறந்த வழிகாட்டிகள். சில கனவுகள் நாம் கண் விழித்த பின்பு மறந்துவிடும். ஆனால், சில கனவுகள், நம்மை வழிகாட்டும் வகையில் இருக்கும். அந்த கனச்வு எனக்கு எதையோ சொல்லியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். அது என்னவாக இருக்கும் என்று அன்று முழுவதும் ஆழ்மனதில் கேட்டுக் கொண்டே இருக்கும். அது போன்று கேட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கனவுகளும் அதன் பலன்களும்:

இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும்,

2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும்,

3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும்

அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும்.

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லை என்று சொல்லப்படுகிறது.

பாம்பு பலன்:

 1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
 2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
 8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்

நற்பலன் தரும் கனவுகள்:

 1. ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
 2. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
 3. கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
 4. விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
 5. திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

14, ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

 1. சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
 2. நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
 3. தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
 4. இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
 5. திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன் மதிப்பு உயரும்.

20.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

 1. பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதநாள் வரையில் குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால் குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். ஆகையால், உடனடியாக குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.