பாம்பு நாக்கு பிளவுபடக் காரணம் என்ன?

103

பாம்பு நாக்கு பிளவுபடக் காரணம் என்ன?

கட்டைவிரலை விட சிறிய உருவமும், பெரும் தவ ஆற்றலும் கொண்ட 60 ஆயிரம் பேர் கொண்ட முனி கூட்டத்தவர்கள் தான் வாலகில்ய முனிவர்கள். இவர்களின் தவ ஆற்றலால் பிறந்த வினதாவிற்கு பிறந்தவர் கருடன். இவர், முதலில் இந்திரனுக்கு எதிரியாகவும், அதன் பின்னர் நண்பராகவும் விளங்குவார் என்று அந்த வாலகில்ய முனிவர்கள் கூறினர்.

புராண வரலாறு!

ஒரு சமயத்தில் வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையினுடைய வாலின் கலர் என்ன என்பது குறித்து நாகர்களின் தாய் கத்ரு, கருடனின் தாயான வினதாவிடம் கேட்டார். இதற்கு தவறான பதில் சொன்னால், தனக்கு அடிமை என்றும் அவர் குறிப்பிட்டார். வினதாவோ குதிரையின் நிறம் வெண்மை என்று கூற, கத்ரு, தன் கருநிற பாம்புக் குழதைகளிடம் குதிரையில் நிறத்தை கருமையாக மாற்ற கட்டளையிட்டாள். அதற்கேற்ப, கருநிற நாகர்களும் குதிரையின் வாலை சுற்றவே அது கருநிறமாக மாறிவிட்ட து. இதனால், வினதாவின் கூற்று தவறாக, கத்ருவுக்கு அடிமையானாள்.

பாம்பு நாக்கு பிளவு:

தனது தாய் அடிமைப்பட்டுள்ளதை அறிந்த கருடன், கத்ருவிடம் சென்று, தனது தாயை விடுவிக்குமாறு வேண்டினான். ஆனால், அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வர வேண்டும் என்றாள். அதற்கு கருடனும், தேவ லோகத்திலிருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்து, தனது தாயை மீட்டார்.

தர்ப்பைப்புல் மீது வைக்கப்பட்ட அமிர்த கலசத்தை நாகர்களால் கடலில் குளித்துவிட்டு வருவதற்குள் இந்திரன் அமிர்த கலசத்தை எடுத்து சென்றுவிட்டார். இதனால், ஏமாந்து போன நாகர்கள், அமிர்த கலசம் வைக்கப்பட்ட தர்ப்பைப் புல்லை நாக்கால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.