பிணத்தை கண்டால் நாணயங்களை பூமியில் போடனும்!

154

பிணத்தைப் பார்த்தால் நாணயங்களை பூமியில் போடனும்!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதிலும், குறிப்பாக பணப் பற்றாக்குறை, கஷ்டம், சோகம், துக்கம் என்று ஒவ்வொருவரையும் வாட்டி வதைக்கிறது. இதெற்கெல்லாம் ஒரு வழி உண்டு என்றால் அது இறைவழிபாடு தான்.

ஆனால், அங்கேயும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. கோயிலையும் மூடிவிட்டார்கள் என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அப்போ, என்ன செய்வது என்று கேட்கும் நிலையில், வீட்டிலேயே இருந்து இறைவனை பூஜிக்க வேண்டும். எந்த மந்திரத்தை சொன்னால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஏற்கனவே சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தந்த இறைவனுக்கு அந்தந்த மந்திரத்தை சொல்வதன் மூலமாக நமது கஷ்டங்கள், சோகங்கள், பணப் பற்றாக்குறை என்று எல்லாவற்றையும் நீக்கலாம். அதன்படி, உலக இன்பத்தை மட்டும் அனுபவிக்க விரும்புகிறவர்கள் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லலாம். இன்பத்தோடு இறையருளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவாய நம என்ற மந்திரத்தை சொல்லலாம்.

  1. விநாயகரை சுண்டைக்காய் மலர் கொண்டு வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் அழியும்.
  2. நீங்கள் வெளியில் செல்லும் போது பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதைப் பார்த்தாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு செல்ல, அந்த ஆத்மாவினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமலிருக்கும்.
  3. எப்பொழுதும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையோ அல்லது பக்கெட், தொட்டி, குளம் என்று ஏதாவது ஒன்றை பார்த்துவிட்டு சென்றால் செல்லும் காரியம் எளிதாக முடியும்.
  4. அக்கம் பக்கத்தினரிடையே தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினந்தோறும் வீட்டு வாசலில் 3 மெழுகுவர்த்திகளை ஏற்றி வர தொல்லைகள் நீங்கும்.
  5. எதிரிகள் தொல்லை நீங்க, வாரந்தோறும் வெள்ளியன்று உப்பு இல்லாமல் சாப்பிட்டு வர நன்மை உண்டாகும்.
  6. கொடுத்த கடன் திரும்ப வரவில்லை என்றால், உங்களது இஷ்ட தெய்வத்திற்கு தினந்தோறும் நீல நிறை பூ வைத்து 43 நாட்கள் வழிபட்டு வர கடன் வசூலாகும்.
  7. பசு மாடு பால் கறக்கும் நிலையில் இருந்தால் தானம் செய்வது சிறந்த பலன் கொடுக்கும். பால் கறக்கும் பாத்திரமே கொடுத்தால் இன்னும் சிறப்பு. பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளித்தால் கூடுதல் பலன் தரும்.
  8. பசு முதல் கன்று ஈன்றால், அதனை தேனு என்று கூறுவார்கள். 2ஆவது கன்று ஈன்றால், அதனை கோ என்றழைப்பார்கள். 2ஆவது கன்று ஈன்ற பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். தினந்தோறும் பசுவிற்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
  9. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிறை வீட்டு பணப்பெட்டியில் வைத்தால் செல்வ வளம் பெருகும்.
  10. வலம்புரி சங்கை தரையில் வைக்க கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பித்தளை அல்லது வெள்ளித் தாம்பலத்தில் வைத்து வழிபடலாம். எவர் சில்வர் தட்டிலேயும் வைக்கலாம்.
  11. ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் போது வலம்புரி சங்கில் தண்ணீர் விட்டு, அதில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், வில்வக்கட்டை, குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்ய வேண்டும். இறுதியாக சங்கிலிருந்து சிறிதளவு தண்ணீரை குடித்துவிட்டு சிறிது நீரை வீட்டு வாசல்படியில் தெளிக்க வேண்டும்.
  12. வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர் சக்திகள் நெருங்காது. இறைச்சி சாப்பிட்ட நாட்களிலும், பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் வலம்புரிச் சங்கை தொடக்கூடாது.

மருதாணி விதை, சாம்பிராணி, வெண் கடுகு, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி, குங்கிலியம் பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குங்கிலியம், சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ளவற்றை சேர்த்து கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தீபம் போடவும்.

தொடர்ந்து, 48 நாட்கள் ஒரு மண்டலம் செய்து வர கண்டிப்பாக பலன் உண்டு. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, தீய சக்திகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எப்போது பார்த்தாலும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமையின்மை, தூக்கமின்மை, வாக்குவாதங்கள் என்று ஒரே பிரச்சனையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்த பரிகாரத்தை செய்து வர வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்.

வெண் கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப சமூலம், நொச்சி சமூலப் பொடி, குங்கிலியம் மற்றும் தேவதாறு ஆகியவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றுடன் சிறிது சாம்பிராணி போட்டு கலந்து காலை அல்லது மாலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் தீபம் ஏற்றி வர வீட்டிலுள்ள தீய சக்தீகள் விலகும்.

வெறும் 2 நாட்களிலேயே அதற்கான பலனை அனுபவிக்கலாம். நாய்க்கடுகு மற்றும் வெண் கடுகு ஆகியவை பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. வில்வம் சிவனுக்குரியது. வேம்பு அம்மனுக்குரியது. அறுகம்புல் விநாயகருக்குரியது. இந்த வெண் கடுகு, நாய்க் கடுகு, அறுகம்புல் பொடி, நொச்சி சமூலப் பொடி என்று அனைத்தையும் நெருப்பில் போட்டு தீபம் ஏற்ற பைரவ, சிவ பெருமான் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள் என்பது நம்பிக்கை.