பில்லி, சூனியத்தை விரட்ட வராஹி வழிபாடு!

155

பில்லி, சூனியத்தை விரட்டும் வராஹி அம்மன் வழிபாடு!

மகாவிஷ்ணுவின் ஸ்ரீவராஹ அவதாரத்தின் அம்சம் தான் இந்த ஸ்ரீ வராஹி அம்மன். வராஹ என்றால் பன்றி என்று அர்த்தம். பன்றி முகத்துடனும், 4 கரத்துடனும் காட்சி தருபவள். ஆதிபராசக்தியின் படைத் தலைவி யார் என்றால் அது ஸ்ரீ வராஹி அம்மன் தான். இவர் தான் ஒட்டு மொத்த பூமிக்கும் சொந்தக்காரியாக திகழ்கிறார். பில்லி, சூனியம் மற்றும் எதிரிகளின் தொல்லை ஆகியவற்றிலிருந்து விடுபட வராஹி அம்மனை வழிபட வேண்டும்.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி என்றில்லாமல், தினமும் வராஹி அம்மனை 108 முறை சொல்லி குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அப்படி வழிபட்டு வந்தால் பில்லி, சூனியம் மட்டுமல்லாமல் எதிரிகளின் தொல்லையும் இருக்கவே இருக்காது.

கடன் பிரச்சனை, கஷ்டங்கள், துன்பங்களிலிருந்து விடுபட தேங்காயை உடைத்து அந்த இரு தேங்காய் மூடிகளிலும் நெய்விட்டு திரி போட்டு குங்குமம் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். எனக்கு எந்த கடன் பிரச்சனையும் இல்லை என்று சொல்பவர்கள், பஞ்சமி திதி அன்று விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.

வராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி, பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி மற்றும் யோகேஸ்வரி ஆகிய தெய்வத்தை அஷ்டமாதர் என்று கூறுவர். யோகேஸ்வரி இல்லாமல் மற்ற ஏழு தெய்வங்களை ஒரே கல்லில் வடித்திருப்பார்கள். கோயில்களில் தெற்குப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி இருப்பது போன்று இந்த ஏழு தெய்வங்களை சப்த மாதர்களின் சிலைகளை வடித்திருப்பார்கள். காலப்போக்கில் தனித்தனி உருவங்களாக வடித்தார்கள். இவர்களுக்கு காவல் தெய்வங்களாக வீரபத்திரர் மற்றும் விநாயகரை பிரதிஷ்டை செய்திருந்தார்கள்.

வராஹி அம்மனை வழிபடும் போதும் இந்த அஷ்ட மாதர்களையும் நினைத்து வழிபட்டு வாருங்கள். தீய சக்திகள் அனைத்திலும் இருந்து வராஹி அம்மன் உங்களை காத்தருள்வாள் என்பது குறிப்பிடத்தக்கது.