பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும் தெரியுமா?

67

பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும் தெரியுமா?

காசை சேர்த்து வைக்க சிறந்த மூலை குபேர மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு மூலை பகுதி. கஷ்டப்பட்டு உழைத்து நாலு காசு சம்பாதித்து அதனை பாதுகாப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்த காசு அவர்களிடம் தங்குவதற்கு படாதபாடு பட வேண்டும். என்னதான் வேலை செய்தாலும் உடம்பில் ஒட்டுற காசு தான் ஒட்டும் என்று சொல்வார்கள்.

எந்தவித கெட்ட பழக்கும் இருக்காது. ஆனால், கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியவில்லை என்பதற்கேற்ப சம்பாதித்த காசு எங்கே போனது என்று கூட தெரியாது.

எதனால் இந்த நிலை?

இதற்கு காரணம் நீங்கள் குடியிருக்கும் வீட்டில்

குடியிருக்கும் வீட்டில் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று கேட்டால், வீட்டில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யலாம். அப்படி செய்வதன் மூலமாக வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலை தவிர்த்து நேர்மறை ஆற்றலை அதிகரித்து கைக்கு வரும் பணத்தை சேமிக்கலாம்.

என்னதான் கோடி கோடியாய் வருமானம் ஈட்டினாலும் நாம் செல்வத்தை பணத்தை வீட்டில் பாதுகாப்பாக வைக்கும் இடம் பீரோ. வீட்டில் வைக்கவில்லை என்றால், வங்கியில் சேமித்து வைப்போம். வீட்டில் வைக்கும் பீரோவானது சரியான திசையில் தான் இருக்க வேண்டும். அப்படி பீரோவை சரியான திசையில் வைக்காவிட்டால், எதிர்மறை ஆற்றலால் பணம் காலியாவதே தெரியாது.

பொதுவாக திசைகள் என்றாலே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு. இது தவிர்த்து வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு என்று மொத்தம் 8 திசைகள் உள்ளன. ஒவ்வொன்றும் 45 டிகிரி அளவில் தான் உள்ளன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

விதியின்படி, குபேர மூலையான தென்மேற்கு திசையில்தான் பீரோவை வைக்க வேண்டும். அந்த திசையில் தான் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அப்படி வைக்கும் பீரோவை எந்த திசையை நோக்கி திறக்க வேண்டும் என்று சந்தேகம் இருந்தால், அதற்கு தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைத்தால் சிறப்பாக இருக்கும்.

குபேர மூலைக்கு வாய்ப்பில்லையா?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு குபேர மூலையான தென்மேற்கு திசையில் பீரோவை வைக்க முடியவில்லை. அப்படி சொல்லும் போது அதற்குப் பதிலாக வாயு மூலை என்று சொல்லப்படும் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகில் கிழக்கு நோக்கி பீரோவை வைக்கலாம்.

தவிர்க்க வேண்டியது:

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அல்லது குடிபோக நினைப்பவர்கள் தென்மேற்கு மூலையில் கழிவறையோ அல்லது அடுப்பாங்கரையோ இருந்தால் அது போன்ற வீடுகளில் குடியிருக்க கூடாது. முற்றிலும் அது போன்ற வீடுகளை தவிர்க்க வேண்டும்.