புதிதாக குல தெய்வ வழிபாடு செய்ய தொடங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

50

புதிதாக குல தெய்வ வழிபாடு செய்ய தொடங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும். அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும். காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம். இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குல தெய்வம் தெரியாதவர்கள்:

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி கால பைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் கால பைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும். மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்

சிறுதெய்வங்கள்:

நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடப் பட்டு வரும் கிராமத் தெய்வங்களே சிறுதெய்வங்கள் ஆகும். இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக, நோய் நீக்கி நலம் தருபவையாக, வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவையாகக் கருதி வணங்கப்படுகின்றன.

இத்தெய்வங்கள் பரந்து பட்ட தொடர்பில்லாமல் கிராமங்களையே இருப்பிடமாகக் கொண்டு, நாட்டுப்புற மக்களின் மரபோடு நீங்காத உறவு கொண்டு விளங்குகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் பயப்பன என்ற ஆழ்ந்த நம்பிக்கை காரணமாகப் பாமர மக்களால் இவை வழிபடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுதெய்வங்கள்:

 1. வீட்டுத் தெய்வம்
 2. குல தெய்வம்
 3. இனத் தெய்வம்
 4. ஊர்த் தெய்வம்
 5. வெகுசனத் தெய்வம்
 6. பெண்தெய்வங்கள்
 7. ஆண்தெய்வங்கள்
 8. தாய்த் தெய்வங்கள்
 9. கன்னித் தெய்வங்கள்
 10. முதன்மைத் தெய்வங்கள்
 11. துணைமைத் தெய்வங்கள்