புதிய வீட்டிற்கு எந்த மாதத்தில் செல்லலாம்?

1627

புதிய வீட்டிற்கு எந்த மாதத்தில் செல்லலாம்?

வாழும் போது நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். அப்படி வாழ்வதற்கு நாம் இருக்கும் இடங்களில் நேர்மறை ஆற்றம் நிறைந்திருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் கஷ்டங்கள், துன்பங்களைத் தான் அனுபவிக்க நேரிடும். நாம் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்வதற்கு புதிதாக வீடு கட்டி குடி போகும் போதும் சரி, பழைய வீட்டிற்கு வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ செல்லும் போதும் சரி நல்ல நாள், நேர்மறை ஆற்றல், வாஸ்து எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும்.

புதிய வீட்டிற்கு குடி போக உகந்த மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை

வாடகை வீடு குடி போக உகந்த மாதம்:

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி

பங்குனி மாதம் புது வீடு கிரகபிரவேசம் செய்வது தான் கூடாது. ஆனால், பங்குனி மாதம் வாடகை வீட்டிற்கு குடி போகலாம்.

இந்த மாதங்களில் குடி போக கூடாது:

கீழே குறிப்பிட்டுள்ள இந்த ஆறு மாதங்களில் வீடு குடிபுகுதல் அல்லது கிரக பிரவேசம் செய்வது நல்லதல்ல. இந்த மாதங்களில் கிரக பிரவேசம் அல்லது வீடு குடிபுதுதல் கூடாது என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி.

தை மாதம் வீடு குடி போகலாமா?

தை மாதத்தில் எந்த வித சந்தேகமும் இன்றி வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்ய முடியும்.

மாசி மாதம் வீடு குடி போகலாமா?

நமது இறைவன் சிவபெருமான் ஆலகால விஷத்தை சாப்பிட்டு மயக்கமடைந்தது இந்த மாசி மாதத்தில் தான். அதனால் மாசி மாதம் வீடு குடி போக கூடாது என்று சொல்லப்படுகிறது.

பங்குனி மாதம் வீடு குடி போகலாமா?

சிவன் மன்மதனை எரித்த மாதம் பங்குனி மாதம். அதனால் வாழ்க்கையை புதிதாக தொடங்குபவர்கள் பங்குனி மாதம் புது வீடு குடி போக கூடாது.

சித்திரை மாதம் வீடு குடி போகலாமா?

சித்திரை மாதத்தில் எந்த வித ஐயமும் இன்றி வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசங்களை செய்யலாம்.

வைகாசி மாதம் வீடு குடி போகலாமா?

வைகாசி மாதத்திலும் வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்யலாம்.

ஆனி மாதம் வீடு குடி போகலாமா?

ஆனி மாதத்தில் வீடு குடி போக கூடாது. ஏனென்று விரிவாக பாப்போம்.

மகாவலி சக்ரவர்த்தி தனது முழு ராச்சியத்தையும் இழந்தது ஆனி மாதத்தில் தான். அதனால் நாம் ராச்சியம் செய்யக்கூடிய வீட்டை ஆனி மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆடி மாதம் வீடு குடி போகலாமா?

ஆடி மாதத்தில் வீடு குடி போக கூடாது. ஏனென்றால் மிகப்பெரிய சிவ பக்தனான ராவணன் தனது இலங்கை கோட்டையை ஆடி மாதத்தில் தான் இழந்திருக்கிறார்.

ஆவணி மாதம் வீடு குடி போகலாமா?

ஆவணி மாதம் வீடு குடி போக மற்றும் கிரக பிரவேசம் செய்ய உகந்த மாதம் ஆகும்.

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?

விஷ்ணுவை வணங்க கூடிய சிறந்த மாதம் புரட்டாசி இருந்தாலும் இரண்யன் அவனது அரண்மனையிலே நரசிம்மமூர்த்தியினால் சம்காரம் செய்யப்பட்டார். ஆகையால் புரட்டாசி மாதத்தில் வீடு குடி போக கூடாது என்று சொல்லப்படுகிறது.

ஐப்பசி மாதம் வீடு குடி போகலாமா?

ஐப்பசி மாதம் வீடு குடி போக மற்றும் கிரக பிரவேசம் செய்ய உகந்த மாதம் ஆகும்.

கார்த்திகை மாதம் வீடு குடி போகலாமா?

கார்த்திகை மாதம் வீடு குடி போக மற்றும் கிரக பிரவேசம் செய்ய உகந்த மாதம் ஆகும்.

மார்கழி மாதத்தில் வீடு குடி போகலாமா?

இந்த மார்கழி மாதத்தில் வீடு குடி போக கூடாது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முதன்மையான காரணம்.

துருயோதனன் தனது சாம்ராஜ்ஜியத்தை மொத்தமாக இழந்தது மார்கழி மாதத்தில் தான்.