புதிய வேலை, சம்பள உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

171

புதிய வேலை, சம்பள உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில். கொங்கு நாட்டில் உள்ள 7 சிவன் கோயில்களில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலும் ஒன்று. அதோடு, காமதேனு வழிபட்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தின் 5 நாட்கள் மட்டும் பசுபதீஸ்வரர் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவருக்கு இடது பக்கமாக அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன. மேலும், நந்திக்கு ஒரு பக்கத்தில் புகழ் சோழர் சிவபக்தரின் தலையோடு இருப்பது போன்ற ஒரு சிலையும், மறுபக்கத்தில் லிங்கத்தை நாவால் வருடுவது போன்றும், பால் மடிக்கு கீழே சிவலிங்கம் இருப்பதும் போன்றும் சிலை உள்ளது.

இது தவிர, சித்தர் கருவூரார் சன்னதி, ராகு, கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளன. கோயிலில் கொடிமரமான கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது. நூறுகால் மண்டபம், புகழ்சோழர் மண்டபம் ஆகியவை இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.

படைக்கும் தொழில் செய்து வந்த பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக சிவபெருமான் காமதேனுவைக் கொண்டு ஒரு திருவிளையாடல் நட த்தினார். சிவபெருமான், நடத்திய திருவிளையாட்டால் தான் கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயில் உருவாயிற்று.

காமதேனு சிவபெருமானை அடைவதற்கு ஆவல் கொண்டிருந்தது. அப்போது நாரதரோ, சிவனை அடைவதற்கான அற்புத வழியைச் சொன்னார். அதாவது, வஞ்சி வனத்தில் தவம் செய்தால் நினைப்பது நடக்கும் என்று கூறுகிறார். அதன்படி கேட்ட காமதேனு, வஞ்சி வனத்திற்கு சென்றுள்ளது. அப்போது ஒரு புற்றுக்குள்ள இருந்த சிவலிங்கத்திற்கு தனது பாலை தானாகவே சுரந்துள்ளது.

இதனால், மனமகிழ்ச்சியடைந்த சிவபெருமானோ, காம்தேனுவுக்கு விரும்பிய படைக்கும் ஆற்றலை கொடுக்கிறார். இதையறிந்த பிரம்மாவோ தனது தவறை உணர்ந்து சிவனே கதி என்று தஞ்சம் அடைகிறார். இதையடுத்து, பிரம்மாவை மன்னித்து படைக்கும் தொழிலை அவருக்கே கொடுக்கிறார். காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைக்கிறார். காமதேனு வழிபட்டதால், இந்த கோயிலில் சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை (பரிகாரம்):

  1. திருமணமாகாத ஆண், பெண் இந்தக் கோயிலுக்கு வந்து பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், ஆனிலையப்பர் ஆகியோரை வழிபட்டு வர விரைவில் திருமண பாக்கியம் கிட்டும்.
  2. குழந்தை வரம் வேண்டும் தம்பதியினர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
  3. தொழில் விருத்தியடையவும், உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலை ஆகியவற்றிற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.