புரட்டாசி மாதத்தில் விரதம் கடைபிடிக்கும் முறை!

84

புரட்டாசி மாதத்தில் விரதம் கடைபிடிக்கும் முறை!

ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு உகந்த மாதமோ அதே போன்றூ புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் எந்த மாதிரியான விரதங்களை மேற்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

புரட்டாசி மாதம் என்றாலே விசேஷம் தான். அதிலேயும் சனிக்கிழமை புரட்டாசி என்றால் இன்னும் சிறப்பு. வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையை தவற விடக்கூடாது. இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து வழிபட்டு வர அனைத்து தேவைகளையும் பெருமாள் பூர்த்தி செய்வார் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு வேண்டுதல் செய்ய நினைத்தால் அதனை இந்த மாதம் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இந்த மாத த்தில் வரும் 1ஆவது சனிக்கிழமை, 2ஆவது சனிக்கிழமை, 3ஆவது சனிக்கிழமை, 4ஆவது சனிக்கிழமை மற்றும் 5ஆவது சனிக்கிழமை ஆகிய நாட்களில் மறக்காமல் பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

அதே போன்று புரட்டாசி மாதம் விரதம் என்பது முக்கியமான ஒன்று. காலையில் குளித்து முடித்துவிட்டு பெருமாளை நினைத்து வீட்டில் பூஜை செய்து வழிபட வேண்டும். மேலும், மாலையில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பெருமாளுக்கு விரதம் மேற்கொள்ளும் போது வெங்காயம், கரம் மசாலா, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இந்த மாதத்தில் வேங்கடவன், விஷ்ணு சகஸ்ரநாம்ம் ஆகியவற்றை பாராயணம் செய்ய எல்லா பலனும் கிடைக்கும்.

புரட்டாசி மாத த்தில் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் போது சர்க்கரைப் பொங்கல், புளியோதரை படைத்து வழிபட வேண்டும். அப்படியில்லை என்றால், உங்களால் முடிந்தளவிற்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலம் கடன் பிரச்சனை தீரும், பொருளாதார நெருக்கடி குறையும், திருமணத் தடை நீங்கும்.

சனிக்கிழமை தோறும் பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதியிலுள்ள ஏழுமலையானை குறிக்கும் மாவிளக்கு கட்டாயம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைப்பது சிறப்பு. இதன் மூலமாக ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும்.