புரட்டாசி மாத விசேஷங்கள் என்னென்ன?

31

புரட்டாசி மாத விசேஷங்கள் என்னென்ன?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் என்றாலே விசேஷம் தான். அதிலேயும் சனிக்கிழமை புரட்டாசி என்றால் இன்னும் சிறப்பு. வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையை தவற விடக்கூடாது. இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து வழிபட்டு வர அனைத்து தேவைகளையும் பெருமாள் பூர்த்தி செய்வார் என்பது ஐதீகம். புரட்டாசி 1ஆம் தேதி முதல் புரட்டாசி 31ஆம் தேதி வரையில் என்னென்ன சிறப்பு இருக்கிறது என்று இந்தப் பதிவில் காண்போம்…

புரட்டாசி 01: ஏகாதசி, திருவோணம் விரதம். சபரிமலையில் கோயில் நடை திறப்பு. கன்னி சங்கராந்தி, விஸ்வகர்மா ஜெயந்தி.

புரட்டாசி 02: சனிப்பிரதோஷம் – முதல் சனிக்கிழமை

புரட்டாசி 04: பௌர்ணமி விரதம்.

புரட்டாசி 05: மகாளயப் பட்சம் ஆரம்பம்.

புரட்டாசி 08: சங்கடஹர சதுர்த்தி

புரட்டாசி 09: கிருத்திகை – 2ஆவது சனிக்கிழமை

புரட்டாசி 11: தேய்பிறை சஷ்டி

புரட்டாசி 13: தேய்பிறை அஷ்டமி

புரட்டாசி 14: நவமி

புரட்டாசி 15: தசமி

புரட்டாசி 16: ஏகாதசி – 3ஆவது சனிக்கிழமை

புரட்டாசி 18: சிவராத்திரி, பிரதோஷம் (திங்கள் கிழமை)

புரட்டாசி 20: மகாளய அமாவாசை

புரட்டாசி 21: சந்திர தரிசனம்

புரட்டாசி 23: சதுர்த்தி – 4ஆவது சனிக்கிழமை.

புரட்டாசி 25: சஷ்டி

புரட்டாசி 27: அஷ்டமி

புரட்டாசி 28: திருவோணம், நவமி – ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

புரட்டாசி 29: தசமி – விஜயதசமி

புரட்டாசி 30: ஏகாதசி – 5ஆவது சனிக்கிழமை.