பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நல்ல சகுனமா?

41

பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நல்ல சகுனமா?

பொதுவாக கோயில்களிலும் சரி, நல்ல காரியங்கள் நடக்கும் போதும் சரி தேங்காய் உடைப்பது வழக்கம். அப்படி உடைக்கும் தேங்காய் நல்ல உடைந்திருந்தால் இறைவனின் அருள் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொள்வது வழக்கம். இதுவே தேங்காய் உடைக்கும் பொழுது அழுகியிருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம், ஏமாற்றம், மன வருத்தம் ஆகியவை ஏற்படும். மேலும், அந்த தேங்காய்க்குப் பதிலாக வேறொரு தேங்காய் வாங்கி வந்து உடைப்பார்கள்.  உண்மையில் பூஜையின் போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறியாம்.

ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர்தான் வரும். அதே போன்று தான் உங்களது பீடை, சரீர பீடை, கண் திருஷ்டி, ரோகம் ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது. முழு கொப்பரையாக இருந்தால் சுப காரியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். மேலும் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

அடுத்து, தேங்காயில் பூ இருந்தால் ரோக நாஸ்தி, எதிர்பாராத வரவு சொர்ண லாபம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.