பொய் வழக்கு தண்டனையிலிருந்து விடுபட சத்திய நாராயணன் விரதம்!

38

பொய் வழக்கு தண்டனையிலிருந்து விடுபட சத்திய நாராயணன் விரதம்!

மகாவிஷ்ணுவின் அவதாரமே சத்ய நாராயணர் (சத்திய நாராயணர்). ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளில் மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் சத்திய நாராயணன் பூஜை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் சத்திய நாராயணனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதோடு, பொய் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். வறுமை நீங்கி செல்வம் பெருகும். பயம் நீங்குவதோடு, பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த பூஜையின் முக்கிய அம்சம் என்னவென்றால், சத்திய நாராயணரே நாரதரிடம் சென்று, மனிதர்கள் அவர்களது கஷ்டங்களிலிருந்து விடுபட இந்த பூஜை முறையை விளக்கிக் கூறி அதனுடைய மகத்துவத்தையும் உணர்த்துமாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பூமிக்கு வந்த நாரதர் வாழ்க்கையில் துன்பப்பட்ட மக்களை சந்தித்தார்.

அப்போது, அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார். அதற்கு, கலியுகத்தில் சத்திய நாராயணன் விரதத்தை மேற்கொண்டால் அதற்குரிய பலன் கிடைக்கும். ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இந்த பூஜையை முறையாக கடைபிடிக்க வேண்டும். அப்படி பௌர்ணமி நாளில் செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, ஸங்கராந்தி, புரட்டாசி மாத ஒவ்வொரு சனிக்கிழமையும் மேற்கொள்ளலாம். மேலும், அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் பலமாக இருக்கிறாரோ அந்த நாளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதல், பௌர்ணமி நாளில் சத்திய நாராயணன் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சனி-சந்திர சேர்க்கை:

சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் இணைவு புணர்ப்பு தோஷம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனி மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ, சனியின் வீட்டில் சந்திரன் இருந்தாலோ அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அப்படியும் இல்லையென்றால் சம சப்தம் பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தடை ஏற்படும். ஒருவேளை புணர்ப்பு தோஷம் இருந்து திருமணம் நடந்துவிட்டால் அந்த திருமணம் பிரிவில் சென்று முடிகிறது. அதோடு மட்டுமல்லாமல் பலருடன் பழக்கம் ஏற்படும் நிலையையும் கொடுத்து விடுகிறது. ஜாதகத்தில் புணர்ப்பு தோஷம் ஏற்பட்டவர்கள் பொது வாழ்விலும் சரி, ஆன்மீகத்திலும் சரி அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பதால் அவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்களது குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் போய்விடுகிறது. இதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

புணர்ப்பு தோஷம் நீங்க பரிகாரம்:

  1. குரு பார்வை – சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் தோஷம் கிடையாது.
  2. குரு வீட்டில் சந்திர சனி சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது தோஷமில்லை.

பரிகாரம்:

  1. சனிக்கிழமையில் சந்திர பகவானுக்குரிய ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதி தரிசனம் செய்வது சிறப்பு.
  2. சனிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாளில் சத்திய நாராயண விரத பூஜை மேற்கொண்டால் சனி – சந்திர பகவான் சேர்க்கையால் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு உண்டாகும்.
  3. சந்திரன் குரு வீடான தனுசு ராசிக்கு வந்ததைத் தொடர்ந்து சனி – சந்திர சேர்க்கை நீங்கியதோடல்லாமல் சூரியனின் சம சப்தம பார்வையால் பௌர்ணமி யோகம் பெறுகிறது. அதோடு, செவ்வாய் பகவான் சம சப்தமாக பார்த்து சந்திர மங்கள யோகத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.