பொருளாதார பிரச்சனை தீர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு!

65

பொருளாதார பிரச்சனை தீர ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு!

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி திதி அன்று ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை (ஸ்வர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு செய்வது வாழ்க்கையில் இதுவரையில் உள்ள பொருளாதாரம் சார்ந்த அனைத்து விதமான தடைகளும் விலகி வெற்றி கிட்டும். அதோடு நினைத்த காரியம் நடக்கும்.

சிவனின் அம்சத்துடன் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பெரும்பாலான மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவர் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.

இவரை ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் , ராகு காலம் சனி ஓரையிலும் தரிசனம் செய்வது நல்ல பலன் தரும். அதோடு, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார பூஜையிலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது அவரது முழுமையான அருளை பெற்றுத் தரும்.

இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் யாவற்றிற்கும் பொன்னையும், பொருளையும் அள்ளி தருவதற்காக சிவபெருமான் சொர்ண ஆகர்ஷண பைரவராக அவதரித்தார். அவரது திருவுரு படத்தை வீட்டில் வைத்து பூஜித்து வர அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். மேலும், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வடை மாலை, தயிர் சாதம், செவ்வரளிப்பூ ஆகியவற்றை பைரவர் விரும்பி ஏற்றுக்கொள்வார்.