மகாலட்சுமியின் சொரூபங்கள் என்னென்ன தெரியுமா?

73

மகாலட்சுமியின் சொரூபங்கள் என்னென்ன தெரியுமா?

விஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை தாயார் என்று வணங்குகிறோம். முதலில் தாயாரை வழிபட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும். மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.

மகாலட்சுமி வரமளிக்கும் நாளில் வரலட்சுமி ஆகிறாள்.

செல்வம் வேண்டும்போது- தனலட்சுமி ஆகிறாள்.

கல்வி வேண்டும்போது- வித்யாலட்சுமி ஆகிறாள்.

தைரியம் வேண்டும்போது- வீரலட்சுமி ஆகிறாள்.

வெற்றியை வேண்டும்போது- விஜயலட்சுமி ஆகிறாள்.

புகழ் வேண்டும்போது- கீர்த்திலட்சுமி

சாந்தம் வேண்டும்போது- சாந்த லட்சுமி

கருணை வேண்டும்போது- காருண்ய லட்சுமி

உடல்நலம் வேண்டும்போது- ஆரோக்கிய லட்சுமி

ஞானத்தை வேண்டும்போது- ஞானலட்சுமி

மோட்சத்தை வேண்டும்போது- மோட்ச லட்சுமி

சந்தோஷம் வேண்டும்போது- ஆனந்த லட்சுமி

திருமணம் வேண்டும்போது –  வைபவ லட்சுமி

நிலம், வீடு, ஆபரணம் வேண்டும்போது –  ஐஸ்வர்ய லட்சுமி

விவசாயம் செய்யும் விவசாயிகள் வேண்டும்போது- தானிய லட்சுமி

அழகை வேண்டும்போது – சவுந்தர்ய லட்சுமி

மகப்பேறு வேண்டும்போது – சந்தான லட்சுமி

நோயிலிருந்து மீளவேண்டும்போது – சக்தி லட்சுமி

சாமர்த்தியம் வேண்டும்போது – பக்தி லட்சுமி