மகாளய பட்சம் வரும் நாட்களில் என்ன பலன் தெரியுமா?

219

மகாளய பட்சம் வரும் நாட்களில் என்ன பலன் தெரியுமா?

மகாளயப் பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் வரும் அமாவாசை வரை நீடிக்கும். மறைந்த நமது முன்னோர்களை அவரவர் விரும்பக் கூடிய இடங்களுக்கு சென்று வர எமதர்மராஜா அனுப்பி வைப்பாராம். அப்படி அவர்கள் செல்லும் நாள் தான் மகாளப் பட்சம் ஆரம்பிக்கும் நாள்.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி 5 ஆம் தேதி செப்டம்பர் 21 ஆம் தேதி செவ்வாய் கிழமை மகாளய பட்சம் தொடங்கி, அக்டோபர் 6 ஆம் தேதி அதாவது புரட்டாசி 20 ஆம் தேதி முடிகிறது. இந்த 16 நாட்களும் என்ன திதி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்…

மேலும் படிக்க: மகாளயப் பட்சம்: தர்ப்பணம் செய்தால் ஏற்படும் பலன்!

மகாளயப் பட்சம் ஆரம்பிக்கும் நாள் பிரதமை திதி…

நாள் 1: பிரதமை திதி – செல்வம் பெருகும்.

நாள் 2: துவிதியை – வம்சம் விருத்தியாகும்.

நாள் 3: திரிதியை – திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.

நாள் 4: சதுர்த்தி – எதிரிகளின் தொல்லை நீங்கும்.

நாள் 5: பஞ்சமி – விரும்பிய பொருள் கிடைக்கும்.

நாள் 6: சஷ்டி – தெய்வீக தன்மை ஓங்கும் (மதிப்பு மரியாதை கூடும்).

நாள் 7: அதிதி – தெய்வத்தை (விருந்தினர்) உபசரிப்பதைக் குறிக்கும்.

நாள் 8: சப்தமி – மேல் உலகத்தினரின் ஆசி கிடைக்கும்.

நாள் 9: அஷ்டமி – நல்லறிவு வளரும்.

நாள் 10: நவமி – ஏழேழு ஜென்மத்துக்கும் நல்ல வாழ்க்கைத் துணை.

நாள் 11: தசமி – தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.

நாள் 12: ஏகாதசி – வேத வித்யை, கல்வி, கலைகளில் சிறப்பு உண்டாகும்.

நாள் 13: துவாதசி – தங்கம் மற்றும் வைர நகைகளின் சேர்க்கை உண்டு.

நாள் 14: திரியோதசி – குழந்தை பாக்கியம் உண்டாகும். கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

நாள் 15: சதுர்த்தசி – கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.

மகாளயப் பட்சம் முடியும் நாள் மகாளய அமாவாசை…..

நாள் 16: மகாளய அமாவாசை – மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.