மகா கணபதி வழிபாடு!

41

மகா கணபதி வழிபாடு!

விநாயகப் பெருமானை முழு முதல் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம். கணங்களிற்கு எல்லாம் அதிபதி. விநாயகப் பெருமான் தும்பிக்கை ஆழ்வார், கஜமுகன், ஆனைமுகன், விக்னேஸ்வரன், பிள்ளையார், கணபதி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

முழு முதல் கடவுள் என்பதால், எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னதாக விநாயகரை வழிபட்டு தான் செய்யப்படுகிறது. ஹோமம் உள்ளிட்ட பல சாஸ்திர சடங்குகளிலும் பிள்ளையாருக்கு தான் முதலில் பூஜை செய்யப்படுகிறது.

ஆனால், விநாயகப் பெருமானை எப்படி தொழுதாலும் அதனை ஏற்றுக் கொள்வார். ஆனால், முழு பக்தியுடன், அவரை நினைத்து வழிபட வேண்டும். அதனால், தான் விநாயகப் பெருமானை பிள்ளையார், தொந்தி கணபதி, ஆனைமுகன், விக்னேஷ்வரா என்றெல்லாம் கூறுகிறோம்.

நமது கஷ்டங்களை எல்லாம் நீக்க மகா கணபதி மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். மகா கணபதி மந்திரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். தினந்தோறும் காலை மற்றும் மாலையில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.

மகா கணபதி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்

கணபதயே வர வரத சர்வஜனம் மே

வசமானய ஸ்வாஹா.

தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட எண்ணம், மனம் தெளிவாகும். வீட்டில் நல்ல அதிர்வுகள் ஏற்படும். தடைபட்ட அனைத்து நல்ல காரியங்களும் நடக்கும் என்பது ஐதீகம்.