மனதில் நினைத்த காரியம் நடக்க வேப்பிலை நாணயம் வழிபாடு!

57

மனதில் நினைத்த காரியம் நடக்க வேப்பிலை நாணயம் வழிபாடு!

கூலுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை, வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அம்மனின் வாக்கு. பெரும்பாலான அம்மன் கோயில்களில் வேப்பிலை தான் பிரசாதமாக கொடுக்கப்படும். வேப்பிலை என்பது அம்மனுக்குரிய மரம். வேப்ப மரத்தை சக்தியின் ரூபமாகவே பலரும் வழிபாடு செய்வார்கள். வேப்பிலையின் கசப்புத் தன்மை நமது உடலில் உள்ள நோய்களை மட்டுமல்லாமல், துஷ்ட சக்திகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும், நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டியடிக்கும்.

இவ்வளவு ஏன், மனதில் என்ன நினைக்கிறோமோ அதனை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மை இந்த வேப்பிலைக்கு உண்டு. மரத்திலிருந்து ஒரு கொத்து வேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்துக் கொண்டு, மஞ்சள் நீரில் நனைத்து, குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அதனை உலர வைத்து விட்டு, காய்ந்த பிறகு அதில் வேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொஞ்சமாக குங்குமத்தை தூவிக் கொள்ள வேண்டும். பிறகு காணிக்கையாக முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே வீட்டு பூஜையறையில் அம்மன் பட த்திற்கு கீழாக வைக்க வேண்டும். இப்படி வேப்பிலையுடன் நாணயத்த்தை முடிந்து வைத்து அம்மனை வழிபாடு செய்வதன் மூலமாக நிறைவேறாத வேண்டுதல்கள் கூட நிறைவேறும். நாம் நினைக்கும் காரியங்கள் கூட எளிதாக நடந்து முடியும் என்பது ஐதீகம்.

எப்படி குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைக்கிறோமோ அதே போன்று தான் இந்த வேப்பிலை நாணயத்தை செய்ய வேண்டும். மேலும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு அந்த முடிந்த துணியை எடுத்துக் கொண்டு கோயில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். அதோடு, கோயிலில் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து, குடும்பத்தோடு வழிபாடு செய்து வந்தால் சகல சௌகரியங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.