மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

74

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோயில்!

சென்னை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் உள்ளது மதுரகாளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் மதுரகாளியம்மன் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மட்டுமே மூலவர் சன்னதி திறந்திருப்பது மிகவும் சிறப்பு.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மலட்டுத் தன்மை உடையவர்கள், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற வேண்டுவோர் இந்தக் கோயிலில் உள்ள மதுரகாளியம்மனை வழிபட்டு செல்கின்றனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் படைத்தும், எலுமிச்சை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறுவாச்சூர் பகுதியில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கிறதோ அதே போன்று பெருங்களத்தூர் பகுதியிலுள்ள மதுரகாளியம்மன் கோயிலிலும் வழிபாடு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றை மட்டுமே அணிந்து வர வேண்டும். பெண் பக்தர்கள் புடவையில் தான் வர வேண்டும்.

ஸ்ரீ மதுரகாளியம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள், இந்தக் கோயில் அர்ச்சகர்கள், கோயில் சிப்பந்திகள், உபயதாரர்கள் ஆகியோர் மட்டுமே கோயிலின் மேல் பிரகாரத்திற்குள்ளாக அனுமதிக்கப்படுகின்றனர். அம்மனை பிரதட்சிணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கீழ் பிரகாரத்தில் தான் வலம் வர வேண்டும். மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் உற்சவரைத்தான் தரிசிக்க முடியும்.

துரையை எரித்த கண்ணகி தனது கோபம் தணிந்து இங்கு மதுரகாளியாக அமர்ந்துள்ளார் என்று சிறுவாச்சூர் கோயில் தல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அநியாயம், எங்கு, எந்தப் பகுதியில் எப்படி நடந்தாலும் மதுரகாளி பொறுத்துக் கொள்ளமாட்டாள். அநீதியை தட்டிக் கேட்கவும் தவற மாட்டாள். இப்படி புகழ் வாய்ந்த மதுரகாளி அம்மனுக்கு சென்னையில் தாம்பரம் அருகிலுள்ள பெருங்களத்தூரில் ஒரு கோயில் உள்ளது.