மலை தேன் குறித்த ஜோதிட சூட்சுமங்கள்!

96

மலை தேன் குறித்த ஜோதிட சூட்சுமங்கள்!

பல விதங்களில் நன்மை செய்யக் கூடியது தேன். தாந்த்ரீக பரிகாரமாக ஒரு பாட்டில் தேனை வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்க வியாபாரம் நல்ல முன்னேற்றம் காணும்.

குரு: ஜாதகம் அல்லது கோட்சாரத்தில் குருவின் நிலை திருப்தி தரும் படி இல்லையெனில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகள் தேன் தானம் செய்து வர குருவினால் ஏற்படும் பாதகங்கள் குறையும்.

ராகு மற்றும் கேது: இவ்விரு சாயா கிரகங்களினால் ஏற்படும் தோஷத்தை / சேதத்தை தடுக்க சிவனுக்கு மலை தேன் அபிஷேகம் செய்து வந்தால் ஒரு நல்ல பலனை ஏற்படுத்தும்.

கோபம் குறைய: சிறிய வெங்காய சாரோடு மலை தேன் கலந்து உண்டு வர கோபங்கள் குறையும். இரத்த கொதிப்பு சரியாகும்.

செவ்வாய்: ஜாதகத்தில் செவ்வாயினால் ஏற்படும் பாதிப்பை அதாவது உடல் ரீதியான கோளாறுகளை தீர்க்க தொடர்ந்து ஒரு தேக்கரண்டி தேன் அருந்தி வருதல் நலம் பயக்கும்.

சூரியன்: சூரியன் ஜாதகத்தில் வலுவிழக்கும் சமயம் நம் உடலில் வயிற்று கோளாறுகள் ஏற்படும் – இதை போக்க சூரியனை நம் உடலில் வலுப்படுத்த மலை தேன் தொடர்ந்து உண்டு வரலாம்.

வாதம் (சனி) பித்தம் (சூரியன்) கபம் (குரு) : நம் உடலில் இம்மூன்றையும் சமன்படுத்த தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மலை தேன் குடித்து வரலாம். இது வடக்கே ஜோதிடர்கள் தங்களிடம் ஆலோசனைக்கு வரும் அனைவரிடமும் கூறும் ஒன்றாகும்.