யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்?

107

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்?

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு.

யானை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உண்டு. ஆம் ஒவ்வொரு நாளும் தன் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானைகள், வழியில் கிடைக்கும் உண்ணத்தக்க மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன.

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. அதனால் யானைகள் பயணம் செய்யக்கூடிய தூரம் வரை சில நாட்களில் அதன் எச்சத்திலிருந்து பல புதிய மரம், செடி, கொடிகள் என பல தாவரங்களை உருவாகின்றன. இது காடுகளை உருவாக்க முக்கிய காரணமாக அமைகின்றன.

தினமும் மூலிகை தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் அதிகளவில் பலன் தரக்கூடிய விலங்காக யானை இருக்கிறது. இது காட்டு விலங்காக இருந்தாலும் அதை பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது. மேலும் மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது.

யானைகள் ஏன் தெய்வீகமாக பார்க்கப்படுகிறது?

ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு. மனிதர்கள் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித்துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும். சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர்.

இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்களுள் ஒன்று தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசன பயிற்சிகளாகும். யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றனர். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட தெய்வீகத்தைப் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும்.