யானை மட்டும் ஏன் ஆசிர்வாதம் செய்கிறது?

64

யானை மட்டும் ஏன் ஆசிர்வாதம் செய்கிறது?

பாலூட்டி வகை தாவர உண்ணி விலங்கு தான் யானை. அதிக நாட்கள் கிட்டத்தட்ட 70 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைக்கு தந்தம் கிடையாது. பொதுவாக யானைகள் இலைகள், பழங்கள், மூங்கில், மரம், செடி, கொடிகள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன.

எப்போது பார்த்தாலும் யானை உணவை உட்கொண்டுக் கொண்டே இருக்கும். அதாவது, ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரையில் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இதுவே நன்கு வளர்ச்சியடைந்த யானைகள் 140 முதல் 270 கிலோ வரையில் உணவு உட்கொள்கின்றன.

மனிதனுக்கு அடுத்த வரிசையில் அறிவாற்றலில் சிறந்தவையாக யானைகள் பார்க்கப்படுகின்றன. ஏனென்றால், யானையில் மூளையே மிகப் பெரியது. 5 கிலோ கிராமுக்கும் அதிகம் தான் யானையின் மூளை. யானைகள் கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொள்கின்றன. யானைகளுக்கு இரக்க உணர்ச்சி மிக அதிகம்.

அதிக உணவுகளை உட்கொள்ளும் யானைகள் போடும் சாணத்தில் தான் பல விதைகள் முளைத்து மீண்டும் மரங்கள் வளர்கின்றன. எப்போதும் மூலிகைத் தாவரங்களை உண்ணும் யானைகள் காட்டு விலங்காக இருந்தாலும் கூட அதனை பழக்கப்படுத்தினால், மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகும் குணம் கொண்டது. ஏனென்றால், அதற்கு இரக்க குணம் உண்டு.

இதை விட, ஒரே நேரத்தில் இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு கூட சுவாசமானது 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித் துவாரத்திலிருந்து மற்றொரு நாசித் துவாரத்திற்கு மாறிக் கொண்டே இருக்கும்.

சுவாசத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆன்மீக பயிற்சி முறைக்கு சரகலை என்ற பெயர் உண்டு. இந்த ஆன்மீக பயிற்சி முறையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, பிராணாயாமம் மற்றும் வாசி யோகம் ஆகிய யோகா பயிற்சிகள் ஆகும். யோகாசனத்தில் முழுமையான பயிற்சி பெற்றவர்கள், குறிப்பாக வாசி யோகம் மற்றும் பிராணாயாமத்தில் அதிக பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே ஒரே நேரத்தில் 2 நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் ஆற்றலை பெறுகின்றனர். இந்த முறைக்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

இப்படி ஒரே நேரத்தில் 2 நாசித்துவாரங்கள் வழியாக சுவாசிக்கும் யானைகள் அல்லது சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையால் நமது தலையில் வைத்து ஆசி வழங்கும் போது நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. கோயில் யானைகளிடம் ஆசி வாங்கினால், அதைவிட சிறப்பு எதுவும் இல்லை.

ஏனென்றால், விஷேச நாட்களில் யானைகள் மூலவர்களை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றன. ஆதலால், கோயில் யானைகளிடம் ஆசி வாங்கினால், இறைவனை நமக்கு ஆசி வழங்குவற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனால், தான் யானைகளிடம் நாம் ஆசி பெறுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.