யோகினி ஏகாதசியின் விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்!

111

யோகினி ஏகாதசியின் விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்!

யோகினி ஏகாதசியின் விரதம் இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கும். மஹாராஜா யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத் மாவை வணங்கி, “பரம் பொருளே, நிர்ஜ லா ஏகாதசியின் அபார மகிமையப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆடி மாதத்தில், கிருஷ்ணபட்சத்தில் வரும் யோகினி ஏகா தசி, சுத்த ஏகாதசியைப் பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன்.”

“ஆகையால், மது என்னும் பெயர்கொண்ட அரக்கனை அழித்ததால் மதுசூதனன் என்னும் திருநாமம் பெற்ற கிருஷ்ணா, தயை கூர்ந்து விவரமாக சொல்லவும்” என்று கூறினார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரரை நோக்கி, “மஹாராஜா, உபவாசம் இருக்கக் கூடிய நாட்களிலேயே மிகச்சிறப்பான நாள் ஏகாதசி திருநாள். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் சிறப்பானது ஆஷாட மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் சுத்த ஏகாதசி. இதை யோகினி ஏகாதசி என்றும் அழைப்பர்.”

“இந்த ஏகாதசி விரதத்தை கடை பிடிப்பதன் பலனாக அவரவரது பாவத்தின் பிரதி பலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர். அரசர்களில் மேலானவனே, இந்த ஏகாதசியானது, இந்த உலகில் அழியும் பொருட்களின் மீது பற்றுகொண்டு மாயை என்னும் உலகாயத சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு, ஆன்மீகம் (பக்தி) என்னும் கரையின் பால் கொண்டு சேர்க்கும் நன்னாளாகும்.”

“மூவுலகிலும், உபவாசம் இருக்க கூடிய விரத நாட்களில் இந்நாளே முதன்மை யானதாகும். புராணத்திலிருந்து உனக்கு ஒரு உண்மைக் கதையை சொல்கிறேன் கேள் ” என்று கூறி, சொல்லலுற்றார். தேவர்களின் செல்வத்தைக் காத்து வருபவரும், அளகாபுரி பட்டணத்தை ஆண்டு வருபவரும் ஆன ராஜா குபேரர், சிவபெருமானிடம் ஆழ்ந்த ஈடுபாடும், பக்தியும் பூண்டவர்.

அவர் ஹேமமாலி என்னும் யக்ஷனைத் தன்னுடைய தோட்டத்தைக் கவனித்து கொள்ளும் பணியில் அமர்த்தினார். ஹேமமா , மயக்கும் பெரிய கண்களையுடைய தன்னுடைய மனைவி ஸ்வரூபவதீ மீது தீரா காமவசப்பட்ட காதல் மயக்கத்தில் இருந்தான்.

ஹேமமாலி, அன்றாடம் குபேரனின் பூஜை க்காக, மானஸசரோ வர் ஏரிக்குச் சென்று ஏரியைச் சுற்றிலும் மலர்ந்துள்ள மலர்க ளை பறித்து வந்து சேர்ப்பிக்க வேண்டும். குபேரன் அம்மலர்க ளைக் கொண்டு நித்தமும் சிவபூஜை செய்வது வழக்கம்.

ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக ஹேம மாலி மலர்களை பறித்து முடித்தவுடன் குபேரனது அரண்மனைக்கு செல்லாமல், நேராக தன்னுடைய மனைவியைக் காணச் சென்றுவிட்டான். மனைவி யின் மீதான காதலில், பூஜைக்கு மலர்க ளை சேர்ப்பிக்கும் பணியை மறந்தே போனான்.

ராஜனே கேள்! இங்கு ஹேமமாலி தன்னு டைய இல்லாளுடன் இல்லற சுகத்தில் மோகித்து தன்னை மறந்து கிடக்க, அங்கு குபேரன் ஹேமமாலியின் வருகைக் காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, பின், சிவபூஜையில் தடங்கல் ஏற்படுவதை பொ றுக்காமல் கோபம் கொண்டு,

தன் காவலாளியிடம் “நீ சென்று ஏன் இந்த கெட்ட உள்ளம் கொண்ட ஹேமமாலி இன்னும் தினசரி பூஜை மலர்களைக் கொண்டு வரவில் லை என்று அறிந்து வா” என்று பணித்தான்.

காவலாளியும் சென்று உண்மை நிலவரத் தை அறிந்து வந்து அரசர் குபேரனிடம், ‘எங்களுக்கு பிரியமான பிரபுவே, ஹேமமாலி இல்லற சுகத்தில் தன்னை மறந்து கிடக்கிறான்’ என்று மொழிந்தான்.

அதைக்கேட்ட குபேரன் மிகவும் சினம் கொண்டு ‘உடனே மதியீன ஹேமமாலியை அழைத்து வந்து தன் முன்னால் நிறுத்தும் படி’ கட்டளையிட்டான்.

தன‌க்கிட்ட பணியை  ச் செய்ய மறந்த தவ றை உணர்ந்ததோடு அல்லாமல், காமவசப்பட்டு மனைவியுடன் காதலில் ஈடுபட்டதும் வெளியில் தெரிந்ததால், ஹேமமாலி, குபேரன் முன் மிகவும் பயத்துடனும், நடுக் கத்துடனும் நின்று முதலில் தன்னுடைய வணக்கங்களைத் தெரிவித்தான்.

கோபத்தால் கண்கள் சிவக்க, ஆவேசத்தா ல் உதடுகள் துடிக்க, மிகுந்த கோபத்துடன் குபேரன் ஹேமமா லியை நோக்கி – “பாபி, மஹா பாதகம் புரி ந்தவனே, நீசனே, காமா ந்தகாரகா (காமி), பக்தியின் மேன்மையை உணராதவனே, தேவர்களுக்கு குற்றம் விளைவிக்கும் நடமாடும் அவமான சின்னமே, தேவர்களுக் கெல்லாம் தேவரான சிவ பெருமானின் பூஜைக்கு பங்கம் விளைவித்த நீ உன் மனைவியைப் பிரிந்து, வெண் குஷ்டரோகத்துடன் மிருத்யுலோகத்தில் பிறந்து அல்லல்பட்டு அவதிப்படுவாய். நீ செய்த பாவச்செயலுக்கு அதுவே சரியான தண்டனையும் ஆகும்”என்று சபித்தான்.

சாபத்தின் விளைவாக ஹேமமாலி அள‌கா புரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன் பூவு லகில் வீழ்ந்தான். அவன்மனைவி விசா லாட்சி உள்ளம் உடைந்தாள். உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத, அடர்ந்த, பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில் கண் விழித்தான்.

நெடுநாட்கள் இப்படியே துன்பத்தில் சென் றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக் கம் வராமல் அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ண த்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்க வொண் ணா இன்னலுற்றான்.

இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவ பெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாதுதொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது.

செய்த பாபகர்மத்தினால் விளைந்த சாப த்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவ பெரு மானிடம் கொண்டபக்தியால், தன் முந்தை ய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது.

இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து , மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து, ஹேம மாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான்.

அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவ பக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷிமார்க்கண்டேயரை, பிரம் மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர்.

அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன் று அழகுற விளங்கியது. ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர், த‌ன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்மதேவன் போல் அமர்ந் திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு, ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும், வந்தனத் தையும் செலுத்தினான்.

பிறர் நலனில் அக்கறை கொண்டு, அவர் துயர் துடைக் கும் மனிதாபிமானம் மிக்க ரிஷி மார்க்க ண்டேயர், குஷ்டரோகியாக தோற்றத்தில் இருக்கும் ஹேமமாலியைக் கண்டார்.

அவனை அருகில் அழைத்து, “நீ என்ன பாவம்செய்து, இத்தகைய கொடிய துன்ப த்தை அடைந்தாய் என்று வினவினார். இதை கேட்டவுடன் ஹேமமாலி, வேதனை யுடனும் வெட்கத்துடனும் பதிலளித்தான்.

“முனி ஸ்ரேஷ்டரே, நான்,குபேரபுரியை ஆட்சி செய்யும் யக்ஷ ராஜன் குபேரனின் பணியாள். என் பெயர் ஹேமமாலி. என் எஜமான் குபேரனின் அன்றாட சிவபூஜைக் காக, மானசரோவர் ஏரிக்கரையிலிருந்து பூஜைக்கான மலர்களை தினமும் பறித்து வந்து சேர்ப்பதுஎனக்கு இட்ட பணியாகும்.

ஒரு நாள் காமம் தலைக்கேற எனக்கிட்ட பணியை மறந்து மனைவியுடன் சல்லாப த்தில் ஈடுபட்டு தாமதமாக மலர்களை கொ ண்டு சேர்ப்பித்தேன். தாமதத்தின் காரண த்தை அறிந்த என் எஜமானன் குபேரன், மிகுந்த சினத்துடன் சிவபூஜைக்கு பங்கம் விளைவித்த என்னை சபித்தார்.

அவரதுசாபத்தின் விளைவால் நான் இந்த தோற்றத்தில் தங்கள் முன் நிற்கிறேன். சாபத்தின் விளைவால் என் வேலை, வீடு, மனைவி அனைத்தையும் இழந்து மீளும் வழி தெரியாது அலைந்து கொண்டிருக்கி றேன். ஏதோ என் முன் ஜென்ம நல்வினை ப் பயன் காரணமாக தவசிரேஷ்டரான தங் களை காணும் பேறு பெற்றேன்.

தங்களை கண்டதும் நல்வழி பிறக்கும் என் று நம்பிக் கைஏற்பட்டுள்ளது. பக்தர்க ளின் துயர் தா ளாது கருணையுடன் அவர் களது துயரை துடைக்கும் பக்தவத்சலா, மற்றவர்களின் நலத்தையே குறிக்கோளா க மனதில் கொண்ட புண்ணியசீலரே, தயைகூர்ந்து நான் இந்த சாபத்திலிருந்து மீளும்வழியை அருளி உதவுங்கள்!” என்று வேண்டி நின்றான்.

கருணை மிகுந்த மார்க்கண்டேயர் இதைக் கேட்டவுடன், “ஹேமமாலி வருத்தப்படாதே, நீ மறைக்காமல் உண்மை உரைத்ததால், உனக்கு மிகுந்த நல்பலனை அளிக்கும் ஏகாதசி விரத நாளை பற்றி கூறுகிறேன் கேள்..”

“நீ ஆஷாடமாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப் படி உபவாசம் இருந்து விரதத்தை கடை பிடித்தால் பகவான் மஹாவிஷ்ணு வின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னு டைய சாபத்திலிருந்து விடுபடலாம்” என்றார்.

இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடு ஞ்சாண்கிடையாக விழுந்துநமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி.ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலி யை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அரு ளாசி வழங்கி அனுப்பினார்.

ஹேமமாலி, விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசி ரமத்திலிருந்து வெளியேறி னான். ரிஷி மார்க்கண்டேயர் சொல்லிய படி, ஹேமமா லியும் ஆஷாட மாத கிருஷ் ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைகளின் படி கடைபிடித்தான்.

அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகா ன யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடுதிரும்பி தன் மனை வி யுடன் சந்தோஷமாக வாழலானான்.

தர்மத்தை தவறாது கடைபிடிக்கும் யுதிஷ் டிரா, யோகினி ஏகாதசி விரதத்தின் மஹி மையும், அதன் சுபபலன்களையும் பற்றி அறிந்து கொண்டாய். யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது.

எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதி முறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவா ச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் ஏகாதசி தேவியின் அருளால் தங்களுடை ய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார்.

“மஹாராஜனே, நீ கேட்டபடி ஆஷாட மாத கிருஷ்ணபட்ச ஏகாதசியின் புண்ணிய மஹிமையை விவரித்துள்ளேன்” என்று முடித்தார். பிரம்ஹ வைவர்த்தன புராணம் ஆஷாட கிருஷ்ணபட்ச ஏகாதசி அதாவது யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமை இது தான்.