ராகு கேது தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

52

ராகு கேது தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

விழுப்புரம் மாவட்டம் தும்பூர் என்ற ஊரில் உள்ள கோயில் நாக கன்னியம்மன் கோயில். இந்தக் கோயிலில் நாக கன்னியம்மன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகள், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்த கோயிலில் நாகமானது 10 கிமீ தூரம் வரையில் சிலையாக காட்சி தருகிறது. இதையே நாக கன்னியம்மன் என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மற்ற நாட்களில் சிறிது நேரம் மட்டுமே கோயில் திறக்கப்படும். ராகு, கேது தோஷம் நீங்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தீராத வழக்குகளை பொறுத்தவரையில் அரசர்களுக்கு இங்குள்ள திருவட்டப்பாறை தான் ஒரு வரப்பிரசாதம். ஏனென்றால், ஒருவன் பொய் சொல்வதாக கருதினால், அவனை இந்த வட்டப்பாறை மீது ஏறச் சொல்லி சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். அப்படி செய்யும் சத்தியமானது பொய்யாக இருந்தால், அவனது கண்கள் குருடாகி விடும், அதோடு, அவன் பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்பது நம்பிக்கை.

ஆமத்தூர் என்ற தலத்தில் திருவட்டப்பாறை என்ற பகுதி இருந்தது. ஒரு முறை இந்த பகுதியை ஆண்ட அரசன் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. அதாவது, தம்பி தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை எல்லாம் அண்ணன் பறித்துக் கொண்டதாக புகார் கூறினான். அந்த அண்ணன் தனது சொத்துக்களையும், தம்பிக்குரிய சொத்துக்களையும் விற்று அந்த தொகையை வைத்து ரத்தினக் கல் வாங்கி துவாரம் உள்ள கம்புக்குள் வைத்து ஊன்றுகோல் போன்று அதனை கையில் வைத்துக் கொண்டு திரிந்தான்.

இந்த புகாரைத் தொடர்ந்து அரசன் அந்த அண்ணன்காரனை அழைத்து விசாரித்தான். அவனோ, தனது தம்பிக்காரன் பொய் சொல்வதாக கூறினான். அண்ணன்காரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஊன்றுகோலைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசனுக்கு ஒரே குழப்பம். இதையடுத்து, திருவட்டப்பாறை மீது ஏறி நின்று சத்தியம் செய்யும்படி உத்தரவிட்டான்.

அண்ணனும், தம்பியும் திருவட்டப்பாறை மீது ஏறினர். அண்ணன், தனது கையிலிருந்த ஊன்றுகோலை தம்பியிடம் கொடுத்து, எனது சொத்துக்களும், தம்பியின் சொத்துக்களும் அவனிடமே உள்ளது என்று கூறி சத்தியம் செய்தான். அவனுக்கு எதுவும் ஆகவில்லை. தம்பியோ அதிர்ச்சியுற்றான். இதைத் தொடர்ந்து அந்த ஊன்றுகோலை பெற்றுக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

அதன் பிறகு தனது நண்பர்களிட்த்தில் என்னைப் பார்த்தீர்களா! எனக்கு ஒன்றும் ஆகவில்லை. பாம்பு கடிக்கும், கண் குருடாகும் என்றெல்லாம் சொல்கிறார்களே, எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறிக் கொண்டே நடந்து கொண்டிருக்கும் போதே திருவட்டப்பாறையின் கீழிருந்த பாம்பு சீறி எழுந்து, அண்ணனை துரத்தியது.

அவன் நீண்ட தூரம் ஓடி பாதாளத்துக்குள் குதித்தான். தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் பாம்பு மூலவராக உள்ளது. அது நாகராஜாவாக உள்ளது. அதே போன்று தும்பூரில் உள்ள கோயிலில் பாம்பு தான் மூலவர். ஆனால், அதுவே நாக கன்னியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.