கந்து வட்டி கடன் தீர எளிய பரிகாரங்கள்!

194

வங்கி கடன் முதல் கந்து வட்டி கடன் வரை: கடன் தீர எளிய பரிகாரங்கள்!

கடன் பிரச்சனையால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வழியில் கடன் இருக்கும். கடனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. பணக்காரனுக்கு கூட அவனது தகுதிக்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடன் இருக்கும். ஏழை எளிய மக்கள் வங்கியில் கடன் வாங்க முடியாமல் கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுவே பணக்காரனாக இருந்தால் எப்படியெல்லாம், வங்கியில் கடன் வாங்கலாம் என்று தெரிந்து வைத்துக் கொள்கின்றனர். எல்லோரையும் சொல்லவில்லை.

கடனே இல்லாமல் என்னால் வாழ்ந்து காட்ட முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால், கிரக அமைப்பும், விதியும் அப்படி யாரையும் விட்டு வைக்காது. கடன் வாங்கும் நிலைக்கு தள்ளி விடும். அப்படி கடன் வாங்கி விட்டு கந்து வட்டி கொடுமையால் எத்தனையோ பேர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். கடன் சுமையால் அவதிப்படுவோர் ஏராளமானோர். சரி, இந்த கடன் சுமை குறைய, கடன் பிரச்சனை தீர என்ன தான் செய்ய வேண்டும், இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்கிறீர்களா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  1. கடன் பிரச்சனை தீர்வதற்கு முதல் பரிகாரமே குல தெய்வ வழிபாடு தான். யாரும் குல தெய்வம் தெரியாமல் இருப்பதில்லை. அப்படியும் தெரியவில்லை என்றால், 5 முக குத்து விளக்கு ஒன்றை வீட்டு பூஜை அறையில் வைத்து இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.

பரிகாரம் 1: 5 முக குத்து விளக்கை மலர்களால் அலங்கரித்து, குங்குமமிட்டு, குல தெய்வத்திற்கு இஷ்டமான படையல்கள் படைத்து, தீப ஆராதனை செய்து கடன் பிரச்சனை தீர பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 9 பௌர்ணமி நாட்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால், நீங்களே வியக்கும் அளவிற்கு கடனை அடைத்து முடிக்கும் அளவிற்கு இறைவன் அருள் புரிவார்.

  1. செல்வத்தை வாரி வழங்குவதில் வல்லவர் பெருமாள் என்றால், கடன் இல்லாத வாழ்க்கையை தரக்கூடியவர் சக்கரத்தாழ்வார். ஆகையால், பெருமாளுக்கு உகந்த கிழமைகளான புதன் மற்றும் சனி ஆகிய நாட்கள் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்று துளசி மாலை சாற்றி 12 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் வலம் வரும் போது மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து 12 வாரங்கள் செய்து வர, கடன் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடும்.
  1. பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயில்களுக்கு சென்று உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கடன் பிரச்சனை தீர பித்தளை விளக்குகள் வாங்கிக் கொடுத்து தினமும் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வாருங்கள்.
  1. குளிகை நேரத்தில் கடன் வாங்கியவரிடம் சென்று, கொஞ்சம் கடனை கொடுங்கள். அப்படி செய்தால், கடன் கொஞ்சம் கொஞ்சமாக அடைபட்டுவிடும். ஏனென்றால், குளிகை நேரத்தில் நீங்கள் செய்யும் காரியம் திரும்ப திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம்.
  1. வீட்டு பூஜை அறையில் துடைத்து விட்டு, மஞ்சள் தூள் கொண்டு அக்‌ஷயம் என்று எழுத வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எழுதி வர கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும். இதனை நீங்களே அறிவீர்கள்.