வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன?

33

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன?

மண்டபத்திற்குரிய அலங்கார பொருட்கள்:

1- சின்ன வாழைக்கன்று இரண்டு
2- தோரணம் (கிடைத்தால்)
3- மாவிலை தோரணத்திற்கு.
4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
5- சீரியல் மின் விளக்கு.
6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு.
1- அம்மனை வைக்க சொம்பு.
2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க
3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
5-தாழம்பூ (கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்)
6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது.
7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய்.
8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)

பூஜைக்கு தேவையான பொருட்கள்:

1- காமாட்சி விளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- இழை (மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
10- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்:-

  1. அப்பம்
  2. வடை (உளுந்து வடை)
  3. கொழுக்கட்டை
  4. வெல்ல பாயசம்
  5. சர்க்கரை பொங்கல்
  6. கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)

இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்
பழ வகைகள்:

வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா வகையான பழங்களும். பூஜை முடிந்த பின், அர்க்யம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். மாலையில் மஹா லஷ்மிக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும். பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தஷிணை கொடுக்கவும். மறு நாள் காலை புனர்பூஜை செய்து, மஹா லஷ்மியை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். மஹா லஷ்மிக்கு வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.