வரலட்சுமி விரதம் பூஜை செய்யும் முறை!

103

வரலட்சுமி விரதம் பூஜை செய்யும் முறை!

திருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்களது தாலி பாக்கியம் நிலைக்கவும், மாங்கல்ய பலம் பெருகவும், குடும்பத்தில் சுபீட்சம் உண்டாகவும், கன்னிப் பெண்களின் மனதிற்கு பிடித்த வரன் அமையவும் மகாலட்சுமியை முறையாக வீட்டிற்கு அழைத்து வழிபடுவது வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம்).

ஆவணி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆவணி 04, வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் பதிவில் வரலட்சுமி பூஜை செய்யும் முறை, பூஜைக்கு தேவையான பொருட்கள் என்னென்ன, நைவேத்தியங்கள், பழ வகைகள் என்பது குறித்து பார்ப்போம்…

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்:

மண்டப அலங்காரபொருட்கள்:

 1. வாழைக்கன்று – 2.
 2. தோரணம்
 3. மாவிலை
 4. அம்மனின் பின் அலங்காரத்தை ரசிப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடிஅ
 5. சீரியல் லைட்
 6. அம்மன் அலங்காரத்திற்கு பூ சரம்.
 7. அம்மனை வைக்க சொம்பு.
 8. காதோலை
 9. கருக வளையல்
 10. மாவிலைக் கொத்து, தேங்காய்
 11. தாழம்பூ
 12. ஜடை அலங்காரம்
 13. சொம்பில் வைப்பதற்குரிய தேங்காய்
 14. வாழை இலையில் அரிசியை வைத்து அதில் அம்மனை வைக்க வேண்டும்.
 15. அம்மனுக்கு சாற்ற ரவிக்கை துணி

பூஜைக்கு தேவையான பொருட்கள்:

 1. விளக்கு, எண்ணெய், நெய், திரி
 2. பூ மாலை, உதிரி பூக்கள்
 3. பூஜைக்கு தேவையான தட்டு
 4. மஞ்சள், சந்தனம், குங்கும்ம், அருகம்புல், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம்,
 5. பஞ்ச பாத்திரம், உத்தரினி.
 6. இழை(மா) கோலம் போட தேவையான பொருட்கள்
 7. மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
 8. அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்:

இட்லி, அப்பம், வடை, கொழுக்கட்டை, வெல்ல பாயாசம், கொடக்கடலை சுண்டல், வெல்லம்,

பழ வகைகள்:

வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, சப்போட்டா, மாதுளை கிடைக்கும் எல்லா பழங்களும்

பூஜை முடிந்த பிறகு அர்க்கியம் விட்ட பிறகு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் படைத்து, கற்பூரம் கொழுத்தி ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் காலையில் புனர்பூஜை செய்து அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்க வேண்டும். அம்மனை வைத்த அரிசியை வரும் கிருஷ்ண ஜெயந்தி அன்று திண்பண்டம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.