வழிபாட்டுக்காக உபயோகிக்கப்படும் தேங்காய் அழுகி இருந்தால் அதற்கு என்ன காரணம்?

135

வழிபாட்டுக்காக உபயோகிக்கப்படும் தேங்காய் அழுகி இருந்தால் அதற்கு என்ன காரணம்?

நம் வழிபாடு, கோவிலாக இருந்தாலும் நம் வீட்டு பூஜை அறையாக இருந்தாலும் கடவுளுக்கு வைத்து வழிபடும் பழங்களிலே முதன்மையானது வாழைப்பழமும் தேங்காயும் தான். ஏனென்றால் இந்துக்கள் வாழைப்பழத்தையும் தேங்காயையும் ஒரு புனித பழங்களாக கருதுகின்றனர். இந்த இரண்டு பழங்களை மட்டும் கடவுள்களுக்கு படைப்பதையே ஒரு உன்னதமான செயலாக நாம் கருதுகிறோம். அதனாலேயே தேங்காயை கடவுளுக்கு உடைக்கும் போது அது அழுகிய நிலையில் இருந்தால் அதை அபசகுனமாக சிலர் சொல்கின்றனர். உண்மையிலேயே தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அது அபசகுனமா? நல்ல சகுனமா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அழுகிய தேங்காய் நல்லதா?

நாம் பூஜைக்கு பயன்படுத்தப்படும் புனிதமான பழங்களாக நினைத்து கடவுளுக்கு படைக்கும் தேங்காய் நாம் தெய்வங்களின் சன்னிதானத்தில் வைத்து உடைக்கும் போது அந்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மீகத்தில் மூழ்கிப் போய் ஆன்மீகத்துக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு அது மிகுந்த மன வேதனை அளிக்கும். ஏனென்றால் அவர்கள் கடவுளின் மீது கொண்டிருந்த அதீத பக்தியில் அவர்கள் கொண்டு வந்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தேங்காய் அழுகியிருந்தால் அது கெட்ட சகுனமான நல்ல சகுனமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

நாம் கடவுள்களுக்கு உடைக்கும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அது நல்ல சகுனம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நீங்கள் கடவுள்களுக்கு உடைக்கும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அந்த தேங்காய் உங்களை சுற்றி இருந்த துர் சக்திகள், கெட்ட சக்திகள் உங்கள் வீட்டில் இருந்த எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் ஈர்த்துக் கொண்டது எனவும். அப்படி அந்த தேங்காய் அழுகிய நிலையில் இருக்கும் பொழுது. அது உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதனை குறிப்பதாக இருக்கும் நல்ல சகுனம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

எனவே, இனிமேல் கடவுளுக்கு பூஜை செய்யும் போது நீங்கள் உடைக்கும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதை அபசகுனமாக எடுத்துக் கொள்ளாமல். உங்களை பிடித்த பீடை இன்றோடு ஒளிந்து விட்டது என்பதை நினைத்து சந்தோஷப்படுத்துங்கள். அடுத்தவர்கள் தேங்காய் உடைக்கும் போது அழுகிய நிரையில் இப்பது பார்த்து மன வருத்தப்படும் பொழுதும் கூட இதை சொல்லி அவர்களை ஆறுதல் படுத்தி இது அபசகுனம் என்று எண்ணாதீர்கள் எனக் கூறுவது சாலச் சிறந்தது.