வாகன யோகம் தரும் ஈச்சனாரி விநாயகர் கோயில்!

33

வாகன யோகம் தரும் ஈச்சனாரி விநாயகர் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனூரில் அமைந்துள்ள கோயில் தான் ஈச்சனூர் விநாயகர் கோயில். இந்த கோயிலில் விநாயகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்ய, குழந்தைகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமடைந்து, நல்ல வேலை கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது என்பது உறுதியானது.

ஒரு காலத்தில் மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்கு 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகம் மதுரையிலிருந்து மாட்டு வண்டி மூலமாக கொண்டு வரப்பட்ட து. அப்போது, வழியில் மாட்டு வண்டியின் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியிருக்கும் இடத்திலேயே விநாயகப் பெருமான் அமர்ந்து விட்டார். இதனால், பேரூருக்கு எடுத்துச் செல்ல முயன்றும் முடியவில்லை.

அதன் பின்னர், காஞ்சி சங்கராச்சாரியார் அருளின் படி விநாயகர் சிலை இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட து. அப்படி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தான் ஈச்சனாரி. இதே பெயரிலேயே அதாவது, ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று சிறந்து விளங்குகிறது.

இந்த கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு வந்து விநாயகரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால், குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்து, நல்ல வேலை கிடைத்து வாழ்வில் உயர்வு பெறலாம்.

விரும்பிய திருமண வாழ்க்கை அமையும். மேலும், தொழிலில் முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழை, எளியவர்களுக்கு கட்டணமில்லாமல் இந்த கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிதாக வண்டி வாகனம் வாங்கினால், இந்தக் கோயிலில் வைத்து தான் பூஜை போடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகருக்கு தங்கத்தேர் பவனி இந்த கோயிலில் தான் நடைபெறுகிறது.

அம்மையும், அப்பனும் இணைந்த அர்த்தநாரி இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். கோயம்புத்தூர் காந்திரபுரம் பேருந்தி நிலையத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது.