வாகன விபத்து தடுக்க வழிபட வேண்டிய கோயில்!

45

வாகன விபத்து தடுக்க வழிபட வேண்டிய கோயில்!

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோயிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தர்மபுரி மாவட்டம் இருமாத்தூரில் உள்ள கோயில் கொல்லாபுரி அம்மன். இந்தக் கோயிலுள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக சொல்லப்படுகிறது. கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

திருட்டு போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கு இந்தக் கோயிலில் வினோதமான ஒரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, கோயிலுக்கு தென் பகுதியில் தர்மபுரி திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. திருட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்க வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்கவிட்டு விடுகிறார்கள்.

இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரி அம்மன் கோயிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோயில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டு செல்லும் வழக்கம் உள்ளது.