வாரத்தில் 3 நாட்கள் மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது!

37

வாரத்தில் 3 நாட்களில் மட்டும் மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது!

விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு. காலம் காலமாக இருந்து வரும் இந்த பழக்கம் நாளடைவில் மறைந்து வருகிறது. பழங்காலத்தில் சாப்பிடும் பொழுது, வெளியில் வீட்டு வாசலில் யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், அப்படி யாரேனும் இருந்தால் முதலில் அவர்களுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு பின்னர் தான் தாம் சாப்பிட வேண்டும் என்ற விருந்தோம்பல் பண்பு இருந்தது.

வழியில் செல்லும் வழிப்போக்கன் கூட ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீடுகளில் திண்ணை வைத்து கட்டியிருப்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டங்களில் உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கூட, இவன் ஏன் இங்கு வந்தான்? இவர்கள் எதற்காக இப்போது வந்தார்கள்? என்று நினைக்கத் தோன்றும். அதோடு அண்ணனாக இருந்தாலும் சரி, தம்பியாக இருந்தாலும் சரி, தாய் தந்தையைக் கூட பார்ப்பதற்கு, கவனித்துக் கொள்வதற்கு சண்டை வரும். யாருமே பார்க்க முடியாமல் அனாதை இல்லங்களுக்கு கொண்டு சென்று விடும் சூழல் இன்றைய காலகட்டங்களில் ஏற்பட்டுவிட்டது.

அப்படிப்பட்ட காலகட்டங்களில் ஒருவருடைய வீட்டிற்கு சென்று நாம் உணவருந்தினால் தீராத பகை உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி எந்தெந்த நாட்கள் இருக்கிறது? அதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

விருந்து உபசரிப்புகளில் தமிழனை யாராலும் வென்று விட முடியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டம் இருந்தது. உற்றார், உறவினர் மட்டுமல்லாமல் நண்பர்கள், ஊர்க்காரர்கள் கூட வந்து கலந்து கொள்வார்கள். திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா, மொட்டை போடுதல் என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் தட புடலாக இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் விருந்து பரிமாறுவது தமிழரின் பண்பாடு. ஆனால், அப்படிப்பட்ட தமிழரின் பண்பாடாக இருந்தாலும் விருந்துக்கு சென்றாலும் கூட கிழமை பார்த்து தான் செல்ல வேண்டும்.

வெள்ளி, சனி, திங்கள் விருந்துண்ண புதனாகும்,

கள்ள வியாழன் கசப்பிக்கும்-தெள்ளுகதிர்,

தீராப் பகை காட்டும், செவ்வாய் தனக்குமோ,

வாராப் பகையும் வரும்….

இந்தப் பாடலின் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வெள்ளி, சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய 4 கிழமைகளில் எப்பொழுது வேண்டுமானாலும் விருந்தினர்/உறவினர் வீட்டிற்கு சென்று உணவோ அல்லது விருந்தோ சாப்பிடலாம். இதன் மூலமாக அவர்களுடன் நட்புறவு மேம்படும். மேலும், வலுக்கும்.

ஆனால், இந்த நாட்களைத் தவிர வியாழன் அன்று உணவருந்த சென்றால் தீராத பகை உண்டாகும். அதே போன்று ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமைகளில் ஒருவரது வீட்டிற்கு உணவருந்த சென்றால் வராத பகை கூட தேடி வருமாம். நமது சொந்தம், பந்தம், உறவினர்கள் என்று தான் வீட்டிற்கு உணவருந்த செல்கிறோம். ஆனால், உணவருந்தினால் பகை வரும் என்று தெரிந்திருந்தால் உணவருந்தவே சென்றிருக்கமாட்டோம்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வேறு வழியின்றி வியாழன், ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் உறவினர்களுடைய வீட்டிற்கு சென்று உணவருந்த நேர்ந்தாலோ அல்லது விருந்துக்கு செல்ல நேர்ந்தாலோ அதற்குரிய பரிகாரம் செய்துவிட்டு செல்லலாம்.

  1. வியாழன் கிழமைகளில் உணவருந்த செல்லும் பொழுது, வீட்டில் வெந்நீரை குடித்து விட்டு பின்னர் செல்லலாம்.
  2. ஞாயிற்றுக் கிழமையில் செல்லும் போது நெய்யும், செவ்வாய் கிழமையில் செல்லும் போது பாலும் அருந்திவிட்டு செல்லலாம்.