வாழ்வில் மகிழ்ச்சி பெருக, மணிவிழா பூஜை வழிபாடு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமைந்துள்ளது அமிர்தகடேசுவரர் கோயில். விதியை மாற்றிய தலமாக இந்த கோயில் அறியப்படுகிறது. காரணம், இறைவன், எமனையே தனது காலால் எட்டி உதைத்தது. எதற்காக என்றால் மார்க்கண்டேயனின் உயிரை பறிக்க வந்த எமனை சிவபெருமான் எட்டி உதைத்துள்ளார். இந்த கோயிலில் அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளது. அபிராமி அந்தாதி இந்த கோயிலில் தான் பாடப்பட்டுள்ளது. இந்த கோயிலில் அமிர்தகடேசுவரர் மூலவராக அமைந்துள்ளார்.
துர்க்கை, வாசுகி, புலஸ்தியர், அகத்தியர், பூமி தேவி ஆகியோர் இந்த கோயிலில் வழிபட்டுள்ளனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலங்களில் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் 108ஆவது ஆகும். மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை உதைத்துத் தள்ளியதால், இந்த கோயிலில் மணிவிழா, பவளவிழா, சதாபிஷேக விழா ஆகியவற்றை பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
மேலும், விதியை மாற்றிய திருத்தலமாக இந்த கோயில் அறியப்படுகிறது. கடம் என்பது குடம் என்று பொருள். அமிர்த குடத்தை அருளியவர் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் என்னதான் சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது ஒரு சிறப்பம்சமாக கூறப்படுகிறது.