வாழ்வில் வெற்றி தரும் வாராகி

161

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்க னையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கி னார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள்.
ஒருவர் வாழ்வின் அனைத்து அம்ச ங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
“ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ
பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ
சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ
வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி”
இவ்வுலகமே அவள் பிடியில் தான் இயங்குகி றது, நான்மறையும் நானிலமும் எண் திசையும் அவளின் அருளாட்சியை தான் போற்றி புகழ்கி ன்றது. அண்டத்தை காக்கதான் எத்தனை வடிவம்? அதில் வரும் பேராற்றலை வார்த்தை களால் வர்ணிக்க முடியாது. ஆதிசக்தியாய் தோன்றி ஆதிசிவன், ஆதிநாரணன், ஆதிபிர ம்மன் ஆகியோரை படைத்த தாய் பற்றி நான் மறை வேதம் போற்றும் புகழ் போதாது. அன்னையவள் உலக உயிர்காக்க எடுத்த வடிவங்கள் சில.
வடிவங்களில் வகைகோடி இருந்தாலும் சக்தி என்ற வடிவின் நாயகி தான் அவள் வரங்களை அளிப்பதில் வரலெட்சுமியாய், கல்வியை அளிப்பதில் கலைமகளாய், வீரத்தை கொடுப் பதில் மலைமகளாய் வடிவெடுத்து வையகத் தை வாழ செய்பவள்.
அனைத்திலும் அவள் உறைந்திருக்கிறாள், இறுதியில் அவளே கதி என் பதையும் அவளே முக்தி தரும் மூகாம்பிகா என்றும் நம்மை சொல்லால் சொல்ல வைத்து உணர்வால் உணர்த்துகிறாள் என் அன்னை.
யார் இந்த வாராகி?
********************
சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போ டு திகழ்கிறாள் அன்னை.
பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோ பம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவ ங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம் தான் இந்த வாராகி.
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோ லோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, நம்பிய பக்தர்களுக்கு துளி கூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் வாராகி.
வாராகி என்றாலே வரம் என பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.
“எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்
ஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”
என கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலு ம் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.
வாராகியின் வடிவம்
**********************
வாராகி.. வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவி டு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதார ம் எடுத்தாள். மனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வேத தெய்வங்கள் இவர்களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.
அதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மை க்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற் றலாய் காட்சியளிக்கிறாள். அவள் வடிவத்தை அழகாய் சொல்கிறது வாராகி மாலை:
“இருகுழை கோமளம், தாள்புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணிநீலம் கைகோமேதகம் நகம் கூர்வ யிரம்
திருநகைமுத்து கனிவாய் பவளம் சிறந்த வளல்லி
மரகதநாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே-
வாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளி யுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.
இவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடு க்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.
அருள்காட்சி வடிவம்:- வாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத் தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடி யாக்கும் பைரவியும் வாராகியே..
புவனேஸ்வரி மாதாவிற்கு யார் எதிரிகள்? அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடு பொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.
வாராகிதேவியின் பிறப்பிடம் பூபுரம் என்று சொல்லப்படும் பதினாறாவது ஆவரணமாகும் இது லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீசக்ர மாகும். இது சிந்தாமணி கிருகத்தின் நுழைவுவாயில். இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட மாபெரும் கோட் டையில் அவதரித்து சூரிய சந்திரர்கள் முக்கோடி தேவர்களின் ஒட்டுமொத்த வடிவாகி சுடர்விட காட்சியளிக்கிறாள்.
“ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ் வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங் களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.
அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கை யில் “உலக்கையும், கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.
வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.
இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள். இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே..
ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி..
ஸ்ரீ வாராஹி அன்னையே திருத்தாள் போற்றி.