விநாயகரின் கையில் ஸ்வஸ்திக் அடையாளம் ஏன் தெரியுமா?

94

விநாயகரின் கையில் ஸ்வஸ்திக் அடையாளம் ஏன் தெரியுமா?

உலக தர்மங்களை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதைத் தான் இந்த ஸ்வஸ்திக் அடையாளம் மூலம் விநாயகர் உணர்த்துகிறார்.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று செப்டம்பர் 10-09-2021, ஆவணி 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் இவரது ஜாதகத்தை வழிபட்டால் உத்திராடம் நட்த்திரத்தினர் பலன் பெறுவர். விநாயகப் பெருமான் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குரு, மகரத்தில் செவ்வாய் மற்றும் கன்னியின் புதன் என்றும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சிம்ம ராசியில் இருக்கிறார். இது அவரது சொந்த வீடு. செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்திராடம் நட்சத்திரத்திற்கு அதிதேவையாக திகழ்கிறார். விநாயகப் பெருமானின் ஜாதகத்தை வழிபட்டால் நல்லறிவு உண்டாகும். தடைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

விநாயகப் பெருமான் 4 யுகங்களிலும் 4 அவதாரங்களாக அவதரித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கிருத யுகம் – தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றினார்.

திரேதா யுகம் – மயூரேசர் என்ற பெயரில் மயில் வாகனத்தில் தோன்றினார்.

துவாபர யுகம் – கஜானன் என்ற பெயரில் மூஞ்சூறு வாகனத்தில் தோன்றினார்.

கலி யுகம் – பிள்ளையாராக எலி வாகனத்தில் தோன்றினார்.

உ – பிள்ளையார் சுழி

உ என்பது நாளைக் குறிக்கவும், 2 என்ற எண்ணுக்கும் இதே எழுத்து தான் பயன்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் நாம் வணங்கி வருகிறோம். பிள்ளையார் தனது தாய், தந்தையான சிவனையும், பார்வதி தேவியையும் முதன்மையாக இருக்க சுருக்கமாக உ என்ற சுழியை உருவாக்கினார்.

பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கும் முன்னதாக அந்த பிள்ளையார் சுழியை போட்டு தொடங்கி வருகிறோம். அந்த செயலை செய்தும் வருகிறோம். பிள்ளையாரை நினைத்து எந்த தடையும் இல்லாமல் சுபமாக நடந்து முடிக்க வேண்டும் என்று வேண்டி செயலை தொடங்குகிறோம்.

இது மட்டுமின்றி இன்னும் பல கருத்துக்களும் இருக்கிறது. அது என்ன என்பது குறித்தும் பார்ப்போம்…

இயற்கை வடிவிலான தமிழ் எழுத்துக்களை வட்ட வடிவில் எழுதும் போது அதனுடைய முடிவானது நீளக் கோட்டில் முடியும். முதலில் வட்டம் போட்டு அதன் பின் அதைக் கோடாக இழுத்ததால் பிள்ளையார் சுழி உருவானது என்று கூறப்படுகிறது.

திருமூலர் – அகரம் உயிர் என்றும், உகாரம் இறை என்றும், மகாரம் – மலமென்றும் கூறப்படுகிறது. இதனால், அகரமாகிய உயிரானது உகாரமாகிய இறைவனோடு இணைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குகிறது. இதையே பிள்ளையார் சுழி ஆயிற்று.

ஏடுகளில் எழுதும் போது ஏட்டின் செம்மை மற்றும் எழுதுகோலின் சீர்மை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சுழித்துப் பார்க்கும் வழக்கம் தான் நாளடைவில் பிள்ளையார் சுழியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இது போன்று பிள்ளையார் சுழி வந்ததற்கு பல கருத்துக்கள் கூறப்படுகிறது.

வலது கையில் ஸ்வஸ்திக்குறி:

உலகத்தில் 4 திசைகளிலும் இறைவன் அருள் புரிவதை, ஆட்சி செய்வதை இந்த ஸ்வஸ்திக் குறி குறிப்பிடுகிறது. அதிலுள்ள ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு விதமான தத்துவங்களை உணர்த்துகிறது. ஆன்மாவானது இறைவனை நெருங்க வேண்டுமானால், நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை கொண்ட இந்த உலகம், தர்மங்களை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே விநாயகப் பெருமான் வலது கையில் ஸ்வஸ்திக் அடையாளத்தைக் கொண்டுள்ளார்.