விநாயகரை மூடி வைத்து பூஜை செய்ய திருமணம் நடக்கும்!

53

விநாயகரை மூடி வைத்து பூஜை செய்ய திருமணம் நடக்கும்!

ஆவணி, செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டாலே விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய தொடங்கப்படும். ஆனால், தற்போது உள்ள கொரோனா சூழலில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனினும், சிறிய சிறிய விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அப்படி இல்லையென்றால், தங்களது வீடுகளில் விநாயகருக்கு உரிய கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, பழங்கள் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.

  1. வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டால் வெற்றி நிச்சயம்.
  2. சொர்ண கணபதி மந்திரத்தை சொல்லிக் கொண்டு வெள்ளெருக்கு விநாயகப் பெருமானை வழிபட்டால் தன ஆகர்ஷணம் ஏற்படும்.
  3. பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதோடு, பசும் சாணத்தைக் கொண்டு செய்யப்பட்ட பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபடலாம்.
  4. வெள்ளெருக்கு பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால், வீடு முழுவதும் வெள்ளெருக்கின் கதிர் வீச்சு பரவி சகல தோஷங்களையும் நீக்கி விடும்.
  5. விநாயகப் பெருமானை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட உகந்த நாட்களாகும். செவ்வரளி மற்றும் மஞ்சள் அரளி கொண்டு விநாயகரை வழிபட்டால் கூடுதல் சிறப்பு.
  6. தக்க சமயத்தில் தடைப்பட்ட திருமணம் நடக்க மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகப் பெருமானை ஒரு மண்டலம் 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்து பலன் பெறலாம்.
  7. வெள்ளெருக்கு திரி போட்டு நெய்தீபம் ஏற்றி விநாயகப் பெருமானை வழிபட்டால் குடும்பத்தின் வறுமை நிலை நீங்கும்.