விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

50

விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

மிகவும் எளிமையான கடவுள் என்றால் அது விநாயகர். முழு முதல் கடவுள். வெயிலிலும், மழையிலும் நனைத்தபடி பக்தர்களுக்கு அருள் புரிவார். பிள்ளையார், ஆனைமுகன், விநாயகர், கணபதி, கஜமுகன், விக்னேஸ்வரன்  என்று பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

இடப்பக்கம்:

பிள்ளையாருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது பக்கமாக தனது தாயான கௌரியை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

பின்புறம்:

வளமையை அருளும் கடவுள் விநாயகப் பெருமான். அவரின் பின்புறமானது வறுமையை குறிக்கும். ஆதலால், விநாயகரின் பின்புறமானது வீட்டில் உள்ள எந்த ஒரு அறையையும் பார்த்தவாறு இருக்க கூடாது. வெளிப்புறம் மட்டுமே பார்த்தவாறு இருக்க வேண்டும்.

தென் திசை:

தென் திசையில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. வீட்டின் பூஜையறையையும் கூட தென் திசையில் வைக்க கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.

கழிவறை:

வீட்டின் கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.

உலோகம்:

விநாயகர் சிலையானது உலோகத்தால் செய்யப்பட்டிருந்தால், அந்த சிலையை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கலாம்.

மாடிப்படி:

வீட்டில் மாடிப்படி இருந்தால், மாடிப்படிக்கு அருகில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. அப்படி வைத்தால், அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்:

நிகழும் பிலவ ஆண்டு ஆவணி மாதம் 25 ஆம் தேதி 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலையில் 9.15 மணி முதல் 10.15 மணிக்குள்ளாக விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபடலாம்.

இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால், விநாயகப் பெருமானுக்கு பச்சரிசி மாவு கொண்டு இனிப்பு, காரம் கொண்ட கொழுக்கட்டை செய்வது விசேஷம். மேலும், விநாயகர் கோயில்களில் நடைபெறும் ராகு – கேது பூஜையில் கலந்து கொள்ளலாம். கணபதி ஹோமத்திற்கு கொப்பரை கொடுக்கலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய அபிஷேகம்:

மேஷம் – மஞ்சள் பொடி

ரிஷபம் – சானப்பொடி

மிதுனம் – எலுமிச்சை சாறு

கடகம் – பச்சரிசி மாவு

சிம்மம் – பஞ்சாமிருதம்

கன்னி – நார்த்தம் பழம் மற்றும் சாத்துக்குடி

துலாம் – தேன்

விருச்சிகம் – இளநீர்

தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

மகரம் – சந்தனம்

கும்பம் – பஞ்சாமிருதம்

மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர் ஆகியவற்றை கொண்டு விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.