விபத்துக்கள் தடுக்க மகாளய அமாவாசை வழிபாடு!

138

விபத்துக்கள் தடுக்க மகாளய அமாவாசை வழிபாடு!

மகாளயப் பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் வரும் அமாவாசை வரை நீடிக்கும். மறைந்த நமது முன்னோர்களை அவரவர் விரும்பக் கூடிய இடங்களுக்கு சென்று வர எமதர்மராஜா அனுப்பி வைப்பாராம். அப்படி அவர்கள் செல்லும் நாள் தான் மகாளப் பட்சம் ஆரம்பிக்கும் நாள்.

அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி 5 ஆம் தேதி செப்டம்பர் 21 ஆம் தேதி செவ்வாய் கிழமை மகாளய பட்சம் தொடங்கி, அக்டோபர் 6 ஆம் தேதி புரட்டாசி 20 ஆம் தேதி முடிகிறது. பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்சத்தில் வீட்டிற்கு வரும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் கிட்டும், சுப காரியத் தடை நீங்கும், தீராத நோயும் தீரும், விபத்துக்கள் தடுக்கப்படும்.

ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தர்ப்பணம் செய்யும் போது அது எமதர்மராஜாவிடம் சென்று அவர் நமது முன்னோர்களிடம் அதனை கொடுத்துவிடுவாராம். ஆனால், இந்த மகாளய பட்ச நாளில் நமது முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணமானது நேரடியாக நமது முன்னோர்களிடமே சென்று சேர்ந்துவிடுமாம். புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படுகிறது.

மகாளய அமாவாசை:

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்களை விட தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த புரட்டாசி அமாவாசை. இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாள் தான் நமது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. மற்ற அமாவாசை நாட்களில் செய்யும் தர்ப்பணத்தை விட மகாளய பட்ச காலத்தில் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை வரும் நாட்கள் தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பித்ரு தர்ப்பணம் கடமை:

நாம் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் அதற்குரிய பலன்களாக இன்ப துன்பங்கள் அமைகிறது. நமது முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பணங்கள் மூலமாக நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களது கோபத்திற்கு உள்ளாக நேரிடும்.

இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

மகாளய பட்சம்:

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். அதன்படி செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 6ஆம் தேதி (மகாளய அமாவாசை) வரை 16 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் முறையாக செய்திட வேண்டும்.

முன்னோர்களின் ஆசி:

மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளின் போது நமது முன்னோர்களை அவரவர் விரும்பும் இட த்திற்கு சென்று வர எமதர்மராஜா அனுப்பி வைப்பாராம். அப்படி அவர்கள் சென்று வர ஆசைப்படும் இடம் என்னவோ வீடு தானே. அப்படி அவர்கள் வரும் போது நம் வீடு சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். மேலும், அன்றைய நாளில் அவர்களை வணங்கி வந்தால் அவர்களது ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புண்ணியம் தரும் பித்ரு தர்ப்பணம்:

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலமாக அவர்களது ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். அதன் பின்னர், தான் அம்பாளே வீட்டிற்கு வருகிறாள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக தானிய வகைகள், கரும்பு, அன்னம், பழம் என்று தங்களால் முடிந்தளவு தானம் செய்ய வேண்டும். ஒரு புரட்டாசி மாத அமாவாசை நாளின் போது அன்னதானம் செய்தால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான பலன் கிடைக்கும்.