விளக்கேற்றும் திரியை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

109

விளக்கேற்றும் திரியை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பெண்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி அவர்களது இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கு மட்டும் விளக்கேற்றி வழிபாடு செய்வர்கள். தினந்தோறும் விளக்கேற்றுபவர்களுக்கு அந்த திரியை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது.

வாரம் ஒருமுறை விளக்கேற்றுபவர்கள் சிலர் அப்படியே விட்டுவிடுவதும் உண்டு. விளக்கு ஏற்றிய திரியை அப்படியே விட்டு விட்டால் கண்டிப்பாக அதன் நிறம் பச்சையாக மாறிவிடும். இது போன்று திரியின் நிறம் மாறினால், அது வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல.

பொதுவாக சில பெண்கள் தங்களது வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறை விளக்கை சுத்தமாக விளக்கிவிட்டு அதன் பிறகு விளக்கேற்றுவது நல்லது. அப்படியில்லையென்றால் மறுவாரம் பார்க்கும் பொழுது அந்த எண்ணெய் திரியுடன் சேர்ந்து பச்சை நிறமாக மாறி இருக்கும்.

இது போன்று எண்ணெயும், திரியும் பச்சை நிறமாக மாறினால் வீட்டில் பண தடை ஏற்படும். இன்னும் ஒரு சிலர், விளக்கு ஏற்றி வைத்து அதனை அப்படியே விட்டுவார்கள். விளக்கில் உள்ள திரி கடைசி வரை எரிந்து கருகிவிடும். இப்படியும் செய்யக் கூடாது. திரி கருகினால், வீட்டில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.

அப்போ, விளக்கேற்றும் திரியை என்ன தான் செய்வது என்று கேட்கிறீர்களா? இது அதற்கான பதிலைத் தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்…

விளக்கேற்றி கொஞ்ச நேரத்திற்குப் பிறகு திரி கருகினாலோ அல்லது எண்ணெய் காலியானாலோ நெருப்பை மலர்கள் கொண்டு அணைத்துவிடுவது நல்லது. விளக்கு திரியை அணைக்கும் போது அதனை வாயால் ஊதக் கூடாது. ஒற்றை திரி போட்டு விளக்கு ஏற்றக் கூடாது. விளக்கு ஏற்றும் போது 2 திரிகளை இணைத்து போட்டு தான் விளக்கு ஏற்றி இஷ்ட தெய்வங்களை வழிபட வேண்டும்.

மீண்டும், அதே திரி மீதமிருந்தால் அந்த திரியை கொண்டு விளக்கு ஏற்றலாம். திரி கருகிவிட்டாலோ அல்லது அதன் நிறம் மாறிவிட்டாலோ திரியை மாற்றினால் போதுமானது. தினமும் புதிய திரியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இப்படி விளக்கேற்றும் திரிகளை யாரும் குப்பையில் போடக் கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் குடி கொண்டிருக்கும் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள்.

காலை மற்றும் மாலை என்று இருவேளை விளக்கு ஏற்றுபவர்களால் இருந்து தினந்தோறும் திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை திரியை மாற்றுபவர்களாக இருந்தாலும் சரி திரியை அப்படியே சேர்த்து வைக்க வேண்டும். ஏதாவது பிளாஸ்டிக் பவுல் ஒன்றில் போட்டு திரியை சேர்த்து வைத்து வர வேண்டும். அப்படி சேர்க்கும் திரிகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரு முறை என்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் திரிஷ்டி கழிக்க வேண்டும்.

எப்படி என்றால், இரவு சாப்பாட்டை முடிந்த பிறகு தூங்குவதற்கு முன்னால், வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகம் பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும். அந்த திரிகளை தூப காலில் போட்டு, வீட்டிலுள்ள அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மூன்று முறை திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி கழித்து முடித்த பின்னர், வீட்டு வாசலில் அந்த திரிகளை கொளுத்தி விட வேண்டும்.

முழுக்க எரிந்து முடிந்ததும் வீட்டிலிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்துமே எரியும் திரியில் பஸ்பமாகிவிடும். மேலும், பில்லி, சூனியம், எதிர்மறை ஆற்றல்கள் என்று உங்களைச் சுற்றிலும் எது இருந்தாலும் அந்த எரியும் திரியில் எரிந்துவிடும்.

அனைத்து திரிகளும் எரிந்து முடிந்து கருகியவுடன் அதனை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அப்படியில்லை என்றால் தண்ணீர் ஊற்றி சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் ஓட்டையில் விட்டுவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும், எப்போதும் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் உருவாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இனிமேல் யாரும் திரியை குப்பையிலோ அல்லது வெளியிலோ தூக்கி எறியாதீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.