வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?

94

வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?

தாவரவியல் மாணவனுக்கு  மகா சுவாமிகள் விளக்கம். “எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை.

ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,””என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.

சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,””இதன் பெயர் என்ன?” என்று கேட்டார். மாணவனும் “வெற்றிலை’ என்றான்.

“அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?” என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.

மகா சுவாமிகள் கூறினார்,””எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று” என்று கூறினார்

இறந்தபிறகும் ஒருவர் பேசப்படுவதை வைத்தே அவரது வாழ்நாள் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.