வெற்றிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்!

128

வெற்றிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்!

கற்ப மூலிகைகளில் ஒன்று தான் வெற்றிலை. பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என்று அனைத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

சிவனின் நிறம் வெள்ளை. தேவியின் நிறம் பச்சை. இரண்டும் சேர்ந்து தான் சிகப்பாகும். இதுவே சக்தியின் வடிவம். வெற்றிலை இல்லாமல், சுண்ணாம்பின் வெள்ளையால் எந்த பயனும் இல்லை. அதே போன்று சக்தியின்றி சிவம் இல்லை என்பது போல் வெற்றிலை இல்லாமல், கோயில்களில் வழிபாடு இல்லை.

வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன செய்யப்படும் போது இறுதியில் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பாக நிச்சயிக்கப்படுவதை சம்பிரதாயமாக செய்யும் ஒரு நடைமுறை தான் நிச்சயதாம்பூலம்.

வெற்றிலை பாக்கு கொடுத்துவிட்டாலே அது தாம்பூல சத்தியமாகிவிடும். இதனை யாரும் மீற மாட்டார்கள். வட இந்தியாவில் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்யும் போது 3 வெற்றிலை, 3 பாக்கு எடுத்து வைப்பார்கள். லட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆகிய 3 தெய்வங்களையும் அந்த 3 வெற்றிலை குறிப்பதாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்ததும், திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு உடன் கூடிய தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு சுப நிகழ்ச்சியிலும் வெற்றிலை பாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, கோயில்களில் பூஜை செய்யப்படும் போதும் வெற்றிலை பாக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

வெற்றிலையை வாட விடக் கூடாது. அப்படி வாட விட்டால், வீட்டிற்கு நல்லதல்ல என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதனால், தான் வெற்றிலைக்கு அவ்வப்போது தண்ணீர் தெளித்து வைப்பார்கள். இறைவனுக்கு படைக்கப்படும் வெற்றிலை பாக்கை வலது கையால் தான் வாங்க வேண்டும், கொடுக்கவும் வேண்டும்.

நமது முன்னோர்கள் பெரும்பாலும் வெற்றிலை பாக்கு போடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். வெற்றிலை பாக்கு போட்டால் செரிமாண பிரச்சனை இருக்காது. ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது.

  1. வெற்றிலையில், நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது.
  2. கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி உள்ளது.
  3. வெற்றிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சவிக்கால் என்ற வேதிப்பொருள் இருப்பதாக கூறப்படுகிறது.
  4. வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.