ஸ்படிக மாலை அணிந்தால் ஏற்படும் நன்மைகள்!

150

ஸ்படிக மாலை அணிந்தால் ஏற்படும் நன்மைகள்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பூமிக்கு அடியில் புதைத்து போன நீர் பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்பாறைகளை வெட்டி எடுத்து அதில், தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து பலவிதமான அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக மாற்றப்பட்ட கற்களில் சின்ன சின்னதாக துவாரமிட்டு மாலையாக அணியலாம். இதைத் தான் நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.

ஸ்படிக மாலை அணிவதன் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

 1. குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், எப்போதும் குளிர்ச்சியான உடல்நிலை கொண்டவர்களும் ஸ்படிக மாலை அணியக் கூடாது.
 2. இவர்களைத் தவிர மற்ற யார் வேண்டுமானாலும் ஸ்படிக மாலை அணிந்து கொள்ளலாம்.
 3. ஒருவர் பயன்படுத்திய ஸ்படிக மாலையை மற்றொருவரும் பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு குறைந்தது மூன்றரை மணி நேரமாவது ஸ்படிக மாலையை தண்ணீருக்குள் ஊற வைக்க வேண்டும்.
 4. ஸ்படிக மாலையை இரவு நேரங்களில் அணியக் கூடாது. ஏனென்றால், தனது அதிர்வுகளை தானாக வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்கு கிடையாது.
 5. காலை முதல் இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணிந்திருந்தால் அவரது உடல் சூட்டை இந்த ஸ்படிகம் தன் வசம் இழுத்துக் கொள்ளும். இரவு நேரங்களில் ஸ்படிகத்தை கழட்டும் போது உஷ்ணமாக இருப்பதைக் காணலாம்.
 6. இரவில் கழற்றும் போது ஸ்படிக மாலையை தரையில் தான் வைக்க வேண்டும். அப்போது தான் அந்த ஸ்படிக மாலைக்கு மறுபடியும் பூமியின் மூலமாக ஈர்ப்பு சக்தி கிடைக்கும்.
 7. தினமும் இது போன்று செய்தால், மன அமைதி பெறும்.
 8. ஸ்படிக மாலையை எத்தனை நாட்கள் அணிந்தாலும் அதனுடைய சக்தி குறையவே குறையாது.
 9. ஸ்படிகத்தை நேரடியாகவோ அல்லது வெள்ளி அல்லது தங்கத்துடன் சேர்த்தோ அணிந்து கொள்ளலாம். வீட்டிற்கு ஒரேயொரு ஸ்படிக மாலை போதுமானது.
 10. குழந்தைகளுக்கு அதிக உஷ்ணம் இருந்தால், அவர்களுக்கு ஸ்படிகத்தை அவர்கள் அணிந்திருக்கும் அரைஞாண் கயிற்றில் அணியலாம்.
 11. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் ஆகியவற்றை பூஜையறையில் வைத்து வழிபடவும் செய்யலாம். அப்போது, அதனுடைய ஈர்ப்பு சக்தியானது அதிகமாகவே இருக்கும். வாரத்திற்கு இரு முறை ஸ்படிக விநாயகர், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது அதனுடைய சக்தி அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 12. ஸ்படிகத்தில் அதிக சக்தி வாய்ந்தது மகா மெகரு. இதனை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். மகா மெகருவுக்கும் அபிஷேகம் செய்வது மிகவும் அவசியம்.
 13. ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும் போது லட்சுமி கடாட்சம் வரும்.