ஸ்ரீ பாலாம்பிகை மஹிமை

440

ஸர்வத்திற்க்கும் ஆதாரமான சிவஸக்த்யைக்ய ரூபிணியும், தனக்கு மேலான வஸ்து இல்லாதவளும், ஸமஸ்த தேவதைகளுக்கும் தானே அந்தர்யாமியாக இருப்பவளும்!! பரப்ரஹ்ம்ம சக்தியுமான ஸ்ரீ லலிதேச்வரியிடம் அபின்னமானவளே ஸ்ரீ பாலா த்ரிபுரஸுந்தரீ!! கைவல்ய மோக்ஷத்தை கைமேல் அனுக்ரஹிக்கும் ப்ரஹ்ம்ம வித்தையான ஸ்ரீ வித்யையின் ஆதார தேவதையிவள்!!

மஹா காமகலாக்ஷரத்தினுள் ஸ்ரீ ஷோடஷாக்ஷரீ வித்யையும் அடக்கம் என்பது ஸ்ரீ வித்யா தந்தர வசனம்!! அப்படி

ஸ்ரீ பாலா த்ரிபுரஸுந்தரியின் ரூபபேதங்கள் அனேகமிருப்பினும் ஸர்வோத்க்ருஷ்டமானதும் ஸ்ரீ ஷோடஷாக்ஷரீ மஹாவித்யையும் தனக்குள் லயப்படுத்திய வித்யையும் உபாஸிப்பவனை “அஹமித்யே விபாவயே பவானீம்” என்று பராஸக்தியின் ரூபத்தில் அபேதமாக மாற்றி ஜ்வலிக்கும் வித்யையான “ஸ்ரீ பஞ்சாக்ஷர காமகலா பாலா” வித்யையே அது!!

ஸாக்த ப்ரணவமான ஹ்ரீங்காரத்தையே ஆஸனமாக கொண்டவளும்!! பெளர்ணமி சந்த்ரனையொத்த முகமண்டலத்தை உடையவளும்!! நானாவித ஸெளபாக்ய ஆபரணங்களை அணிந்தவளும்!! தனது நேத்ரங்களினாலே ப்ரஹ்ம்ம விஷ்ணு சிவாதி தேவர்களை கடாக்ஷிப்பவளும்!! மேலிரு கரங்களில் அங்குஷ பாசத்தையும் கீழிரு கரங்களில் அக்ஷமாலை புஸ்தகத்தை தாங்கியவளும்!!

சதுர்தச லோகத்தையும் மோஹிக்க செய்யும் பேரழகு கொண்ட த்ரிபுரஸுந்தரீயும்!! ஒன்பது வயது நிரம்பிய பாலகியும்!! ஸிந்தூர வர்ணத்தையுடையவளும்!! மதுவை காட்டிலும் மதிமயங்க செய்யும் மதுர மந்தஹாஸத்தை உடையவளும்!! ஷட்சக்ரகோணத்தில் ஸஞ்சரிப்பவளான காமகலா ரூபமான ஸ்ரீ பாலையை நமஸ்கரிக்கிறேன்!! என்பது த்யானம்!!

ஸ்ரீ பாலா த்ரியக்ஷரீ, ஷடாக்ஷரீ, நவாக்ஷரீ, த்வாதஸாக்ஷரீ, ஸதாக்ஷரீ, த்ரிஸதாக்ஷரீ என்று பல மந்த்ர பேதங்கள் இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்த ஸமஷ்டி மந்த்ரமும் அதையெல்லாம் விட ஸர்வோத்க்ருஷ்டமானதே இந்த “ஸ்ரீ பஞ்சாக்ஷர காமகலா பாலா வித்யா”

நிவஸது ஹ்ருதி பாலா நித்யகல்யாண ஸீலா!!

ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷீ!!!