ஹோமங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

69

ஹோமங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

நாட்டில் எப்போதெல்லாம் தீயவை தலை தூக்குகிறதோ அப்பொதெல்லாம் கோயில்களில் யாகம், ஹோம்ம் வளர்ப்பது உண்டு. சமீபத்தில் கூட உலகையே ஆட்டி படைத்த கொரோனா தாக்கம் காரணமாக கோயில்களில் ஹோமம், யாகமெல்லாம் வளர்த்தார்கள். இது தவிர, அவரவர் வீடுகளில் குடும்ப நலனுக்காக யாகம் வளர்ப்பதுண்டு. இந்தப் பதிவில், ஹோமத்தின் வகைகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்…

ஹோமத்தின் வகைகள்:

கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவகிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம், ருத்ர ஹோமம், மிருத்யுஞ்ச ஹோமம், புத்திர கமோஷ்டி ஹோமம், சுயம்வரகலா பார்வதி ஹோமம், ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், தில ஹோமம், ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம், ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம், கண்திருஷ்டி ஹோமம், காலசர்ப்ப ஹோமம்.

கணபதி ஹோமம்:

பொதுவாக பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்பார்கள். எந்த காரியம் செய்தாலும் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகு தான் தொடங்குவார்கள். அப்படி தொடங்கும் காரியங்கள், தொழில்கள் என்று எது தடைபட்டு வந்தால், அப்போது நாம் கணபதி ஹோமம் செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

சண்டி ஹோமம்:

தரித்திரம் மற்றும் பயம் காரணமாக பல செயல்கள் தடைபட்டிருக்கும். அதிலிருந்து விடுபட்டு தைரியம் அதிகரிக்க சண்டி ஹோமம் செய்யலாம்.

நவகிரஹ ஹோமம்:

நமது ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியடைய நவக்கிரக ஹோமம் செய்வது நல்லது.

சுதர்ஸன ஹோமம்:

நமக்கு பிடிக்காதவர்கள் வைத்த பில்லி, சூனியம், ஏவல் என்று தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமக் செய்ய சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

ருத்ர ஹோமம்:

கோபம் குறைந்து ஆயுள் விருத்திக்கு ருத்ர ஹோமம் செய்வது நல்லது.

மிருத்யுஞ்ச ஹோமம்:

மாந்தி கிரகம் சனி பகவானின் மைந்தன் என கூறப்படுகிறது. அது அமைந்திருக்கும் இடம் பாதகத்தை தரும். இந்த தோஷத்தை நீக்கவும், பிரேத சாபத்தை நீக்கவும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது.

புத்திர கமோஷ்டி ஹோமம்:

குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு புத்திர கமோஷ்டி ஹோமம் செய்வது நல்லது.

சுயம்வரகலா பார்வதி ஹோமம்:

பெண்களுக்கு ஏற்படும் திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.

ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம்:

ஆண்களுக்கு திருமண தடை நீங்க விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் செய்வது நல்லது.

லக்ஷ்மி குபேர ஹோமம்:

பொருளாதாரம் வளம் பெறுக, செல்வம் அதிகரிக்க செய்யப்பட வேண்டியது லக்ஷ்மி குபேர ஹோமம்.

தில ஹோமம்:

இறந்தவர்களின் சாபத்தால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்கு தில ஹோமம் செய்வது நல்லது.

ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம்:

உடல் ஆரோக்கிய பிரச்சனை நீங்க, எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறவும், நோய்கள் நீங்கி நலம் பெற ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் செய்வது நல்லது.

ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம்:

எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி பெறவும், வியாபாரம், தொழில், வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளின் தொல்லை நீங்கவும் ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் செய்வது நல்லது.

கண்திருஷ்டி ஹோமம்:

கண் திருஷ்டியால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல் போன்றவற்றை நீக்க காரியங்களில் வெற்றி பெற கண் திருஷ்டி ஹோமம் செய்வது நல்லது.

காலசர்ப்ப ஹோமம்:

வாழ்க்கையில் இருக்கக் கூடிய பல பிரச்சனைகளிலிருந்து வெற்றி பெறவும், திருமணத் தடை நீங்கவும், அலுவலகத்தில் இருக்கும் தடைகள் நீங்கி சாதனை படைக்க காலசர்ப்ப ஹோமம் செய்வது நல்லது.