திரியை இப்படி போட்டு தான் விளக்கேற்ற வேண்டும்!

420

திரியை இப்படி போட்டு தான் விளக்கேற்ற வேண்டும்!

பொதுவாக பெண்கள் வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிபட ஏராளமான நன்மைகள் உண்டாகும். ஆனால், எல்லோரது வீடுகளிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுகிறார்களா? என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம். சரி, இதெல்லாம் இருக்கட்டும், வீட்டில் தீபம் எப்படி ஏற்ற வேண்டும், தீபத்தில் என்ன திரி போட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டில், குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, அகல் விளக்கு என்று விளக்குகள் இருக்கும். எந்த விளக்காக இருந்தாலும், தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக விளக்கில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதன் பிறகு தான் விளக்கில் திரி போட வேண்டும். அதுவும், கேள்விக்குறி வடிவத்தில் தான் விளக்கில் திரி போட வேண்டும்.

அப்போது தான், இந்தக் கேள்விக்குறியானது உங்கள்து மனதில் தோன்றும் பல விதமான கேள்விகளுக்கு பதில் சொல்லும். பொதுவாக பஞ்சு திரிக்க்கு ஒற்றை திரி, இரட்டை திரி என்ற கணக்கு கிடையாது. அதனை நன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். நூல் திரியாக இருந்தால், இரண்டு திரைகளை ஒன்றாக்கி தீபம் ஏற்ற வேண்டும். எப்போதும் முருகப் பெருமானுக்கு 6 இழைகள் கொண்ட நூல் திரியில் தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு வாய்ந்தது.

பரிகாரத்திற்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றால், தனியாக ஒரு அகல் விளக்கு வாங்கி வைத்துக் கொண்டு அதில் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய எண்ணெய்களில் தீபம் ஏற்ற வேண்டும். காமாட்சி விளக்கு, குத்து விளக்கில் பரிகார தீபம் ஏற்றக் கூடாது.