21 வகை இலைகள் கொண்டு வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

124

21 வகை இலைகள் கொண்டு வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

ஓராண்டு காலத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வரும் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் கொண்டாடுவதற்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த சதுர்த்தியில் விநாயகப் பெருமானை 21 வகையான இலைகள் கொண்டு வழிபாடு செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்….

மேலும் படிக்க: விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

இதையும் கிளிக் செய்யுங்க: விநாயகப் பெருமானின் சக்தி வாய்ந்த 12 மந்திரங்கள்!

இதையும் படிங்க: பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்!

21 வகையான இலைகள் கொண்டு வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்:

அருகம்புல்:

விநாயகப் பெருமானை அருகம்புல் கொண்டு வணங்கி வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வில்வம் இலை:

சிவபெருமானுக்கு உகந்த வில்வம் இலை கொண்டு விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

முல்லை இலை:

விநாயகப் பெருமானை முல்லை இலை கொண்டு வழிபட்டால் அறம் வளர்க்கும்.

கரிசலாங்கண்ணி இலை:

விநாயகப் பெருமானை கரிசலாங்கண்ணி இலை கொண்டு வழிபட்டு வணங்கி வந்தால் வீட்டிற்கு தேவையான அனைத்தும் வாங்கி மகிழும் யோகம் உண்டாகும்.

இலந்தை இலை:

இலந்தை இலையால் வழிபாடு செய்தால் மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.

வன்னி இலை:

வன்னி இலையால் விநாயகரை வழிபட்டால் வாழ்வும் போதும், வாழ்ந்த பிறகும் அதாவது பூவுலகிலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.

கண்டாங்கத்திரி இலை:

கண்டாங்கத்திரி இலை கொண்டு விநாயகரை வணங்கி வர வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.

ஊமத்தை இலை:

யாராக இருந்தாலும் பெருந்தன்மையான மனம் வேண்டும் என்று சொல்வார்கள். அதாவது விட்டுக் கொடுத்து செல்வது. ஊமத்தை இலைக் கொண்டு விநாயகப் பெருமானை வழிபட பெருந்தன்மையான மனம் பெறலாம்.

அரளி இலை:

அரளி இலை கொண்டு ஆனைமுகனை வழிபட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.

நாயுருவி இலை:

பிள்ளையாரை நாயுருவி இலை கொண்டு வழிபட்டு வணங்கி வந்தால் முகப் பொலிவும், அழகும் கூடும்.

தாழம் இலை:

தாழம் இலையால் (தாழை இலை) ஆனைமுகனை வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும்.

மருதம் இலை:

மருதம் இலை கொண்டு விநாயகரை வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும்.

மாதுளை இலை:

மாதுளை இலையால் ஆனைமுகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட பேரும், புகழும் கிடைக்கப் பெறலாம்.

எருக்கம் இலை:

எருக்கம் இலை கொண்டு விநாயகரை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட்டால் கருவிலுள்ள குழந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், குழந்தையின் அறிவாற்றல் அதிகரிக்கும்.

தவனம் ஜகர்ப்பூரஸ் இலை:

தவனம் ஜகர்ப்பூரஸ் இலையால் கணபதியை வழிபட நல்ல கணவன் அல்லது மனைவி அமையப் பெறலாம். மேலும், கணவன் – மனைவிக்கிடையில் தாம்பத்தியம் சிறக்கும்.

விஷ்ணுகிராந்தி இலை:

விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால் காரியத்தில் வெற்றி கிடைக்கும். அறிவாற்றலும் அதிகரிக்கும்.

அகத்தி இலை:

அகத்தி இலையால் பார்வதி மைந்தன் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அரச இலை:

அரச இலை கொண்டு விநாயகரை வழிபட்டால் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும்.

ஜாதிமல்லி இலை:

ஜாதிமல்லி இலை கொண்டு வினைகளை தீர்க்கும் விக்னேஸ்வரனை வழிபட சொந்த வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும்.

தேவதாரு இலை:

ஆனைமுகனை தேவதாரு இலை கொண்டு வழிபட்டால் எதையும் தாங்கும் மன தைரியம் அதிகரிக்கும்.

மரிக்கொழுந்து இலை:

மரிக்கொழுந்து இலை கொண்டு விநாயகப் பெருமானை வழிபட இல்லற சுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.