7 நாட்களும் கருடாழ்வாரை வழிபட கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

51

7 நாட்களும் கருடாழ்வாரை வழிபட கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஜாதக ரீதியாக இருக்க கூடிய நாகதோஷம், சனி தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவற்றை நீக்க கூடிய சக்தி இந்த மந்திரத்திரத்திற்கு உண்டு. அதே போன்று நமக்கு தெரிந்த, தெரியாத தோஷங்களையும் நீக்கும் சக்தியும் இந்த மந்திரம் கொண்டுள்ளது. அப்படி என்ன மந்திரம், அந்த இறைவன் யார்? என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

பக்‌ஷிகளின் ராஜன் என்று அழைக்கப்படுபவர் கருடாழ்வார். அவரது மந்திரத்தைப் பற்றி தான் இந்தப் பதில் நாம் பார்க்கப் போகிறோம். வேதங்கள் ஒலிக்கப்படும் இடங்களிலெல்லாம் இவரது தரிசனம் கிட்டும். கும்பாபிஷேகம் நடக்கும் இடங்களில் வேதமந்திரங்கள் முழங்கும் சமயத்தில், நிச்சயம் அந்த இட த்தில் கருடனை நாம் தரிசிக்க முடியும்.

பொதுவாக எந்த கோயிலுக்கு நாம் சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும். அதே போன்று பெருமாள் கோயிலுக்கு சென்றால் அங்கு முதலில் கருடாழ்வாரை தான் நாம் முதலில் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஒரு சாஸ்திரமும் சொல்கிறது.

ஜாதகத்தில் இருக்ககூடிய தோஷத்தை நீக்க கூடிய கருடாழ்வாரின் சக்தி வாய்ந்த மந்திரம் என்ன என்பது குறித்து பார்ப்போம். இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்தால், அதற்கான பலன் கிட்டும். ஜாதக தோஷங்கள் நீங்கும். மன பயம் நீங்கும்.

கருடாழ்வார் மந்திரம்:

ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய

விஷ்ணு பக்தி பிரியாய

அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய

பக்ஷி ராஜாய சர்வ வக்கிர,

சர்வ தோஷ, விஷ சர்ப்ப

விநாசனாய ஸ்வாஹா

தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த பொருளையும் தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு.

நமது பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் சக்தியை பெற கருடாழ்வார் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே இருக்கும். உடல் உபாதைகள் தீர ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவு நீங்கி, சந்தோஷம் நிலவ திங்கள்கிழமையில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

மன உறுதிக்கும், உடல் உறுதிக்கும் செவ்வாய்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.

எதிரிகள் தொல்லை நீங்க புதன்கிழமையில் கருடாழ்வாரை வழிபடுவது நல்லது.

நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமையில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

பணப் பிரச்சனை தீர வெள்ளிக்கிழமையில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

சொர்க்கத்தை அடைய சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி, நமக்கு இருக்கும் பிரச்சனை தீர, எல்லா கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபட வேண்டும். தினந்தோறும் கருடாழ்வாரை வழிபட எல்லா கஷ்டங்களும் தீரும் என்பது ஐதீகம்.