அன்பு குழந்தையே…

122

உன்வாழ்க்கை உன்கையில் தான் இருக்கிறது அதன் பொறுப்பு நீ என நினைக்கிறாய். உனது எல்லா கவலைகளுக்கும் அதுவே காரணம்.
நல்லதோ கெட்டதோ உனக்கான எல்லாம் எழு தி வைக்கப்பட்டது. அதில் இருந்து யாராலும் தப்ப முடியாது.
உன் எண்ணங்கள் திசைக்கு திசை மாறி அனைத்து விஷயங்களையம் உன் தலையில் போட்டு அரைக்க வைக்கிறது.
அதன் வேலைபாட்டால் தான் இன்று உன்னை மன அழுத்தில் தள்ளி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர உன் முயற்சி பார்க்கிறேன்.
உன் கண்ணீரின் வெப்பத்தை உணர்கிறேன். என் குழந்தையான நீ தளரலாமா உன் மன வலிமையை நான் உன் சாய்தேவா அறிவேன்.
நீ துவண்டு போகும் மனநிலை கொண்டவர் இல்லை. நீ வாழ்க்கையில் சாதிக்க பிறந்தவர். வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர்ந்து அதை வாழ போகிறவர்.
நீ பாக்கியசாலி. வாழ்க்கையில் எல்லா நாளும் முட்கள் மேல் நடக்கும்படி இருக்காது மலர்கள் மீதும் நீ சவாரி செய்வாய்.
உன் கால்கள் மீது முட்கள் படும் போது அதை தாங்கும் வலிமையை உனக்கு நான் தருவேன் உன்னுடன் இருந்து அதை கடக்கச் செய்வேன்.
அதனால் நீ தனித்து விடபட வில்லை முட்கள் ஏற்படுத்தின காயத்தின் ரணத்தை நான் சரி செய்வேன். உன்னை உயர்த்தி வாழ வைக்க போகிறேன் .
நீ என் அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் உயிர். உன் அம்மா அப்பாவாக என்றும் துணையாய் என் இருதயத்தில் வைத்து அரவ ணைப்பேன்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்…