அர்த்தமுள்ள ஆன்மீக தகவல்கள்!

362

ஒவ்வொரு ராசிகளுக்கும் சொந்த வீடுகளாக இருந்தாலும். வாடகைக்கு குடியிருந்தாலும் அவரவர் ராசிக்கு உண்டான திசைகளில் வாசல் அமைந்தால் மிகவும் சிறப்பு.

1. மேஷம், சிம்மம், தனுசு, ராசிக்காரர்களுக்கு கிழக்கு வாசல் பார்த்த வீடும்.

2. ரிஷபம், கன்னி,மகரம், ராசிக்காரர்களுக்கு தெற்கு வாசல் பார்த்த வீடும்.

3. மிதுனம், துலாம், கும்பம், ராசிக்காரர்கள் மேற்கு வாசல் பார்த்த வீடும்.

4. கடகம், விருச்சிகம், மீனம், ராசிக்காரர்களுக்கு வடக்கு வாசல் பார்த்த வீடும் ராசியானது.

வீடுகளால் நோய் நொடி, கடன் தொல்லை, தொழில் அபிவிருத்தி, சதாகாலம் சண்டை, சச்சரவு ஆகியவை இருந்தால்

1. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்கடுகு 100 கிராம் வாங்கி மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விடவும்.

2. வெள்ளி கிழமை மாலை வேளையில் குங்கிலியம் சாம்பிராணி போடவும்.

3. செவ்வாய் கிழமைகளில் ஒரு வாளி தண்ணீரில் கல் உப்பு – 500 கிராம் கலந்து வீடு முழுதும் தெளித்து வந்தால் தீய சக்திகள் ஓடி வீடும்.