ராம நவமி தெரியும் !!!! பரத தசமி தெரியுமோ ?!?

41

ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !
கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?
லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!
சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !
ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது.
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !
தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !
இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !
நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !
ராமன் உலகைக் காக்க வந்தான் !
லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !
பரதன் நாட்டைக் காக்க வந்தான் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !
ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !
பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !
பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !
ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !
பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !
ராமனோ தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !
புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !
நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !
நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !
பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !
மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு