பஜகோவிந்தத்தில் எல்லா வரிகளுமே பொக்கிஷம் தான்

126

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

மா குரு தன ஜன யௌவன கர்வம் – செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். அது போல் நம்மிடம் இருக்கும் செல்வத்தை விட இன்னொருவரிடம் அதிகம் செல்வம் இருந்தால் நம்மிடம் இருப்பவர்கள் அதிகம் செல்வம் இருப்பவரை நோக்கி சென்று விடுவார்கள். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.

ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் – காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும். ஆனால் இதெல்லாம் புரியாமல் சிலர் தான் செய்தது மட்டுமே சரி என்று வாதம் செய்வார்கள். உங்களுடைய கணக்கை விட காலதேவனின் கணக்கை யார் அறிவார்?

மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா – இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிடு. பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பது போல் எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது. இது புரியாமல்

ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா – இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.